ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 1 சனி

கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன் (ஏசாயா 41:17).

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவான் 14:27) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அருளும் மெய் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் பெற்றுக்கொண்டவர்களாய் வாழவும் அதை நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கவும் தக்கதாக ஜெபம் செய்வோம்.