வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர் – அக்டோபர் 2012)

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகம் அனுதினமும் காலைத் தியான வேளையில் மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. மிகமிக ஆழமான கருத்துக்களுடன், தற்பரிசோதனை செய்யத்தக்க செய்திகள். தியானங்களை எழுதுகிறவர்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன். உங்கள் ஊழியங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

Mrs.Angelina Packanathan, Coimbatore.

2. I am Mr. A.Selvam is a reader of Sathiyavasanam and the monthly magazine, Anuthinamum Christhuvudan Tamil. It is very much helpful for our spiritual growth. I would like to introduce 2 new believers families. Thus they can also grow in Christ.

Mr. A.Selvam, Tuticorin.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் இரு மாதத்திற்கு ஒருமுறை மற்றும் சத்தியவசனம் வெளியீடு மூலம் வரும் இறைசெய்திகள் சத்தியத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறதை உணர்வுடன் அறிந்து செயல்பட, ஜெபிக்க ஊக்குவிக்கிறது.

Mr.Paul Raj, Coimbatore.

4. தங்களுடைய அனுதின தியானமும் மற்ற இதழ்களும் தவறாமல் கிடைக்கின்றது. அநேக தடவைகள் சகோதரி சாந்தி பொன்னுவின் தியானங்கள் சாட்டை அடிகளாகவும், மனத்திற்கு ஆறுதல் அளிப்பவைகளாகவும் உள்ளது. அவர்களை தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக.

Mr.Richard Sam Alex, Chennai.

5. By Lord’s Grace, Our daughter has got appointment as Asst. Professor in a Engineering College in Nagercoil. It was a great Miracle and we are thankful to your Prayer. Please pray that lord should show us a God fearing companion for her Life. We are thankful to you for your sincere prayers. We remember the ministry in our prayers.

Mrs.Mallika Jeyasingh, Kerala.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் மாத இதழ் உண்மையாகவே கிறிஸ்து இயேசுவுடன் நடப்பதற்கு உதவியாயிருக்கிறது. அதில் சிலவற்றையாகிலும் என் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன். எனக்காக ஜெபியுங்கள். நன்றி!

Mr.J.M.Chinnapparaj, Rajapalayam.

7. அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தினசரி தியானநூல் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் இருக்கிறது. மே மாத தியானங்களை எழுதிய அன்பு சகோதரர் தர்ம குலசிங்கம் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கவும்.

Mr.N.Manickam, Erode.

8. நீங்கள் அனுப்புகிற அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ் உண்மையாகவே அனுதினமும் ஆண்டவரோடு உறவாடுவதற்கு உறுதுணையாயிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அதைத் தொகுத்து கொடுக்கின்ற ஊழியர்களை கர்த்தர் இன்னமும் நல்ல ஞானத்தைக் கொடுத்து ஆசீர்வதிப்பாராக! உங்கள் ஊழியத்திற்காக … ஜெபிக்கிறோம்.

Mr.G.Thilagar, Tuticorin.