ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 1 செவ்வாய்
எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ் செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.எங்களுக்கு இரங்கும், கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும் (சங்.123:2,3).
உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி. 29:10) வாக்கு மாறாத தேவன் நான்காவது மாதத்தை காண உதவி செய்தபடியால் அவருக்கு ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தமது நல்வார்த்தைகளை நம்மில் நிறைவேறப் பண்ணும்படியாகவும் அவருக்கு நம்மை தாழ்த்தி ஜெபிப்போம்.