வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச் – ஏப்ரல் 2013)
1. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப் புத்தகம் எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. காலை குடும்ப ஜெபத்தில் இத்தியான புத்தகத்தை வாசித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாள் ஜெபக் குறிப்புகளுக்காகவும் நாங்கள் ஜெபித்து வருகிறோம்.தொடர்ந்து உங்கள் பணி ஆசீர்வதிக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம்.
Pastor.Soman,Gobi Chettipalayam.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தைத் தினமும் படித்து பயனடைகிறேன். மிக்க நன்றி. ஒவ்வொரு மாதமும் அது எப்போது வரும் என்று காத்திருக்கிறேன். அதிகாலையில் தியானபுத்தகத்தை வைத்து தியானிப்பது ஆசீர்வாதமாக உள்ளது.
Mrs.Leslie Thomas, Madurai.
3. என்னுடைய Ph.D படிப்பில் உள்ள தடைகள் நீங்க சென்ற மாதம் ஜெபக்குறிப்பு எழுதினேன். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு தடைகள் யாவும் அகல கிருபை பாராட்டினார். Ph.D. Thesis Submit அவை செய்ய உதவிய தேவனுக்கு நன்றி.
Mrs.Sathiya Rajesh, Tanjore.
4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தவறாமல் கிடைக்கிறது. நன்றி. தேவன் தியான புத்தகத்திலுள்ள செய்திகள் மூலம் அதிகமாக ஆறுதலையும் தைரியத்தையும் இந்த வயதான காலத்தில் எங்களுக்கு கொடுப்பதால் அதிக நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
Mr. J.Richard Sam Alex, Chennai.
5. Greetings to you in His Holy Name. Your Magazine and Daily devotions are very encouraging and thought provoking. Thnak you verymuch.
Mr.P. Jebakumar, Alankulam.
6. I am a supporter and lover of your Ministry ‘Back To The Bible’. I am ardently and fervently interested in reading bi-monthly devotional book ‘Anuthinamum Christhuvudan’ and also the Magazine ‘Sathiya vasanam’. Both of them are very useful for the growth of my spiritul life and the development of my love for Lord Jesus. The articles found in them are inspiring and enlightening especially the articles written by Mrs. Shanthi Ponnu. I am regularly praying for the prayer points printed in the magazine and your Ministry in general.
Mr.Vincent, Srivilliputhur.
7. தங்கள் அன்பான ஆறுதலான கடிதத்திற்காய் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2010 ஆம் ஆண்டு சத்தியவசன சஞ்சிகையை எடுத்து வாசித்துப்பார்த்தேன். அதில் நீங்கள் எழுதியுள்ள எல்லாவற்றையும் ஸ்தோத்திரத்தோடே ஜெபத்தில் விண்ணப்பம்பண்ணுங்கள் என்ற செய்தி எனக்கு ஆறுதலையும் சமாதானத்தையும் தந்தது.
Mrs.Thilakavathi Rajasingh, Chennai.
8. அனுதினமும் கிறிஸ்துவுடன் அநேக ஆத்துமாக்களை இயேசுவண்டை கொண்டு சேர்க்கிறது. உங்கள் பணி மேலும் விரிவடைய, உலகமக்கள் அனைவரும் கிறிஸ்துவின் சீடராகவும் தினம் ஜெபிக்கிறேன்.
Mr.G.Dhanraj, CBE.