ஆசிரியரிடமிருந்து…

(மார்ச்-ஏப்ரல் 2014)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம்மை மீட்கும்படியாக தம்மையே ஒப்புக்கொடுத்த மாசற்ற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

2013ஆம் ஆண்டு வேதவாசிப்பு அட்டவணைப்படி வேதாகமத்தை வாசித்து முடித்தோரின் பெயர்களை இவ்விதழில் 5ஆம் பக்கம் பிரசுரித்துள்ளோம். அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்வாண்டில் புதிதாக இன்னும் அநேகர் வேதத்தை வாசிக்க வாசகர்களை உற்சாகப்படுத்துகிறோம்.

சத்தியவசன ஊழியத்தைத் தங்கள் உதாரத்துவமான காணிக்கையாலும் ஊக்கமான ஜெபத்தாலும் தாங்கிவருகிற பங்காளர்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்கள் தொடர்ந்து நடைபெறும்படியாக ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து உதவ அன்பாய் கேட்கிறோம். தேவன் புதிய ஆதரவாளர்களைத் தர வேண்டுதல் செய்கிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் சத்தியவசன இணையதளத்தில் (www.sathiyavasanam.in) தினமும் இடம்பெறுகிறது. இதை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் ஆவிக்குரிய நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைக்க அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் மார்ச் – ஏப்ரல் மாத தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களோடு ஏனையோர்களும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் யாவும் இயேசுகிறிஸ்துவின் பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்டவையாகும்.

இத்தியானங்கள் இந்த லெந்து காலங்களில் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்க வேண்டுதல் செய்கிறோம். இத்தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் கருத்துக்களையும் எங்களுக்கு எழுதித் தெரிவிக்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்