வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2014)

1. “அனுதினமும் கிறிஸ்துவுடன்” இதில் வரும் தியானங்கள் பரிசுத்த வாழ்வுக்கு உறுதுணையாயிருக்கிறது. தியானங்களை ஜெபத்துடன் எழுதும் ஒவ்வொருவருக்கும் நல்ல சுகத்தையும், பெலத்தையும், ஞானத்தையும் அருள இறைமகன் இயேசுவை வேண்டுகிறேன். சத்தியவசனம் இருமாத இதழ், தொலைகாட்சி மற்றும் வானொலி மூலமாக பாரத்தோடும் ஜெபத்தோடும் செய்துவருகிற உங்களை ஆண்டவர்தாமே ஆசீர்வதிப்பாராக.

Mr.G.Dhanraj, Coimbatore.

2. உங்களது தினதியான பத்திரிக்கை சஞ்சிகைகள் தவறாமல் கிடைக்கப்பெற்று வருகிறோம். பயன் அடைந்தும் வருகிறோம். விசுவாசப் பாதையில் முன்னேற எங்களுக்கு இவைகள் மிகவும் உதவியாக உள்ளது. உங்கள் சீடி ஊழியங்கள், T.V. Radio Programmes-க்காக தினமும் Prayer பண்ணி வருகிறோம். 1985ஆம் ஆண்டில் நாங்கள் விசுவாச பங்காளராக சேர்ந்து இதுவரையிலும் தேவஊழியத்தை நிறைவேற்றி வர உதவிய தேவனை மனதார துதிக்கிறோம். தேவன்தாமே வரும் நாட்களிலும் ஆண்டுகளிலும் அதிகதிகமாய் தேவபணி செய்திட உங்கள் அனைவருக்கும் வேண்டிய பெலன் சுகம் ஜீவன் தந்திட ஜெபிக்கிறோம்.

Mrs.Elizabeth, Madurai.

3. ஒவ்வொரு மாதமும் சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களுக்காக அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்கள் குடும்ப ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் பயன்படுத்துகிறோம். சத்தியவசன புத்தகத்தில் ஒவ்வொரு மாதமும் செய்தி எழுதுபவர்களுக்காகவும், விசேஷமாக சாந்திபொன்னு அவர்களுக்காகவும் விசேஷித்து ஜெபித்து வருகிறேன். உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர ஜெபிக்கிறேன்.

Mrs.Menaka George, coimbatore.

4. சகோதரி சாந்திபொன்னு அவர்களின் Dec-மாத தியானம் 13ஆம் தேதி வந்தவர் வருவார். மனுக்குலத்தின் மீட்பு அநாதியாய் நியமிக்கப்பட்டபடியே ஏற்ற காலத்தில் இரட்சகர் உலகத்திற்கு வந்தார். இந்த தியான பகுதியின் பாகம் எங்கள் ஆலயத்தில் கடந்த 15.12.2013 சிறுவர் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி சற்று மாறுபட்ட முறையில் நடத்த இருந்த எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. மட்டுமல்ல, எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகப் பிரயோஜனமாக இருந்து வருவதற்காக சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்கும் மற்றும் இதை எழுதுகிற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைக் கூறுகிறோம்.

Mr.A.Chandra Sekar, Bangalore.

5. கர்த்தரின் வார்த்தைகளை சத்தியவசன டிவி நிகழ்ச்சி மூலமும், சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் எல்லாவற்றின் மூலமும் அறிந்துகொள்கிறேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் சத்திய வேதத்தைப் படிப்பதற்கு மிக பிரயோஜனமாக உள்ளது.

Mr.R.V.Christian, Trichy.