ஆசிரியரிடமிருந்து…
(மே-ஜுன் 2014)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
மரணத்தையும் பாதாளத்தையும் வென்றவராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.
அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல் வாயிலாக அநேகர் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்து வருவதை அறிந்து தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். தொடர்ந்து இவ்விதழ் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். இத்தியான புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்த அன்பாய் கேட்கிறோம்.
உங்கள் ஜெபத் தேவைகளையும் மனபாரங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளலாம். நாங்கள் உங்களுக்காக பாரத்தோடு ஜெபிப்பதோடு நல் ஆலோசனைகளையும் உங்களுக்கு வழங்குவதற்கு ஆயத்தமாயிருக்கிறோம். இப்புத்தகத்திலுள்ள துதிஜெப விண்ணப்ப பகுதியிலுள்ள ஒவ்வொரு ஜெபகுறிப்புகளுக்காகவும் எங்களோடு இணைந்து ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம்.
சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து சத்தியவசன நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவர உதவும்படி அன்பாய் கேட்கிறோம். இவ்வூழியப் பணிகள் வாயிலாக இன்னும் அநேகர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொள்ளவும் அநேகர் கிறிஸ்துவுக்குள் கட்டப்படவும் இவ்வூழியத்தின் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் வேண்டுதல் செய்யுங்கள்.
இவ்விதழில் மே மாதத்திற்கு டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் யோசுவாவின் வாழ்க்கையிலிருந்து எழுதிய தியானங்களை மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளோம். ஜூன் மாதத்திற்கான தியானங்களை சகோதரி ஜெபி பிடில் அவர்கள் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் வாயிலாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிக்கிறோம்.
கே.ப.ஆபிரகாம்