வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2014)

1. “அனுதினமும் கிறிஸ்துவுடன்” தியானநூல் காலைவேளையில் வாசித்து பயன்பெற மிகவும் உதவியாக உள்ளது. ஆம் எனது காலை போஜனம் “பரலோக மன்னவாகிய” தேவவார்த்தைகள். இது என்னை வயோதிப நாட்களில் பெலப்படுத்துகிறது. திடப்படுத்துகிறது, தாங்குகிறது. இந்நாள் வரை அவரது கிருபை எனக்கு போதுமானதாயிருக்கிறது. தங்களது வேத அட்டவணையைப் பின்பற்றி வேதாகமம் முழுவதும் இந்த ஆண்டு படித்து பயன்பெற உதவியாக உள்ளது.

Mr.D.A. Sundararaj, Chennai.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை நானும் என் மனைவியும் தவறாமல் படிக்கிறோம். அந்தச் செய்திகள் தினமும் எங்களோடு பேசுகிறது. கர்த்தர் எங்களை எவ்வளவோ ஆசீர்வதித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் நானும் என் மனைவியும் அட்டவணைப்படி வேதத்தை ஒருமுறை படித்து முடித்துவிட்டோம். இப்பொழுது மறுமுறை படிக்க ஆரம்பித்துள்ளோம். திங்கட்கிழமை சத்தியவசன டிவி நிகழ்ச்சியை தவறாமல் பார்க்கிறோம். குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு தியானிக்கிறோம். உண்மையாகவே அது பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது.

Mr.T. Selvaraj, Kangayam.

3. We praise God for your Ministry. We enjoy that watching your T.V. Programme every Monday. We are praying for you. Please send us all your Magazine and Literature to my address.

Mr.J.D.Hudson, Munnar.

4. நாங்கள் குடும்பத்துடன் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்திலுள்ள வேதத்தை ஒரு வருடத்திற்குள் வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2013 ஆம் ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வாசித்து முடித்தோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தியானப்பகுதி மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.P.Lily Christy, Trichy.

5. நான் தொலைகாட்சியில் தமிழன் சேணலில் தங்களின் சத்தியவசன நிகழ்ச்சிகளைப் பார்த்து வருகிறேன். ஆழ்ந்த சத்தியங்களுக்காகவும், கருத்தாழமிக்க பாடல்களுக்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்.

Mr.A.Thomas Samuel, Sattur.

6. அனுதினமும் கிறிஸ்துவுடன் 2013ஆம் ஆண்டில் தொடர்ந்து படித்து வந்தேன். ஜூலை – ஆகஸ்டு மாத பிரதியில் தேவவல்லமையும் அவருடைய உண்மையும் மாறாதது என்று உணர்ந்துகொண்டேன். மத்.22ஆம் அதிகாரத்திலுள்ள தேவனுடைய ராஜ்யம், கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள், கலியாண வஸ்திரத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண் டேன். இங்கு அநேகருக்கு இயேசு உயிருடன் இருக்கிறார் என சொல்லியும், தியானபுத்தகத்தில் உள்ள செய்தியை தினமும் கூடிவரும் சகோதரர்களுக்கு படித்து காண்பித்தும் வருகிறேன். நாங்கள் எங்களை இயேசுவுக்கு ஒப்புவித்து ஜெபித்து வருகிறோம்.

Bro.S.Selvam, (மத்தியசிறை, மதுரை)