வாசகர்கள் பேசுகிறார்கள்
(செப்டம்பர்-அக்டோபர் 2014)
1. சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின செய்தி மிகவும் அருமையாகவும், ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றமடையவும் உதவியாக உள்ளது.
Mr.Immanuel Gideon Inbadas, Vellore.
2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுடன் அழகாக எழுதப்பட்டுள்ளது. இதை நான் தினமும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து தியானித்து முக்கியமான செய்திகளை எழுதி வைத்துக் கொள்வேன். ஒவ்வொரு நாளின் தினதியானமும் மிகுந்த ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டதாக இருக்கிறது. வேதாகமத்தின் வரலாறு மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த ஊழியம் மென்மேலும் வளர ஆண்டவர் அருள்புரிவாராக!
Mr.Mercy Refus, Salem.
3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தின தியானம் எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. கர்த்தர் ஆவிக்குரிய காரியங்களை கோடிட்டு காட்டுவது எனக்கு நலமாக உள்ளது. உங்கள் ஊழியங்களுக்காகவும் தினமும் ஜெபித்து வருகிறேன். எங்கள் ஜெபக்குறிப்புகளுக்காக நீங்கள் ஜெபித்து நீங்கள் எழுதியிருந்த கடிதத்தை மிக்க நன்றியுடன் பெற்றுக்கொண்டேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கடிதத்தில் தாங்கள் எழுதி நினைவூட்டின வாக்குத்தத்தம் உற்சாகம் அளிக்கிறது.
Mr.P.Samson Jawaharpandian, Palayamkottai.
4. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் கடந்த ஒரு வருட காலமாக உங்கள் வெளியீடான அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற புத்தகத்தை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். ஒவ்வொருநாளுக்கும் உரிய தியானங்களை படிக்கும்பொழுது மிகவும் பரவசம் ஊட்டுகிறது. சில சமயங்களில் தியானங்களில் குறிப்பிட்ட வசனங்கள் எங்களுக்காகவே எழுதப்பட்டிருப்பதை நாங்கள் தியானிக்கின்றோம். உடலும் மனமும் சோர்வுற்ற சமயங்களில் அதை நான் மீண்டும் படித்து என் மனதைத் தேற்றிக்கொள்கிறேன்.
Mr.D.Gnana prakash, Pakala.
5. Praise God, I would see the T.V.Programmes telecasted. It is very encouraging and enlighting the mind and our spiritual growth. I learn the Biblical truths and how God speaks to us.
Mrs.Sheela Mercy, Chennai.
6. Thank you for sending publications. Anuthinamum Christhuvudan and Sathiyavasanam Magazine. Please for us. God hath helped me to read the whole Bible once a year for more than fifteen years. Pray for me to go in depth in the word of God and study His Word and teach it to others.
Mrs. Magadalene Kamalam, Nagercoil.
7. We praise God for your Ministry. It is wonderful that the Lord is using each one of you to reach out to the world at large with the Good News of the Gospel. All honour and praise to Him alone.
Mr.Cecil Coilpillai, Chennai.