வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2014)

1. ஒவ்வொரு ஞாயிறு மதியம் 12 மணிக்கு தமிழன் டிவியில் ஒளிபரப்பும் சத்தியவசனம் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன். பாடல்களும் செய்திகளும் மனதில் பதியும்படி உள்ளது. பாகவதர் ஐயா அவர்களது செய்தி ஆசீர்வாதமாக இருந்தது. உங்களது ஊழியம் மேலும் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mr.G.Alexander, Erode.

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூலின் சத்தியங்கள் இம்மட்டும் கர்த்தருக்குள் எங்களை பாதுகாத்து நடத்தி வந்தமைக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுகிறோம். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.D.Devanesan, Ranipet.

3. சத்தியவசன சஞ்சிகை கிடைக்கப்பெற்றோம். “இயேசு உங்களை விசாரிக்கிறவர்” என்ற புத்தகம், நாங்கள் குடும்பமாக மீளாத்துயரில் மூழ்கியிருந்தபோது கிடைத்தது. மிக்க நன்றி. மிகுந்த ஆறுதலைத் தந்தது. வசனத்தின் மூலமாக ஆண்டவர் எங்களைத் தேற்றினார். வேதாகமப்புதிர், வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகங்களையும் கவனத்துடன் படிக்கவும் ஆவிக்குரிய வாழ்வில் வளரவும் மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் தினமும் ஆண்டவர் எங்களோடு பேசுவதைப் போலவும், அந்தந்த நாளுக்குரிய பெலனைத் தந்து, சோர்வை நீக்கி, விசுவாசத்தில் வளர உதவுகிறது. தியானங்களை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காக தினமும் ஜெபிக்கிறேன்.

Mrs. Mercy, Tirunelveli.

4. Greetings to you in the precious Name of our Lord and Saviour Jesus. We are really blessed by your Messages. Please pray for us to fulfill God’s plan in our life. We also continue to pray for your Ministry.

Mrs.V.Prince Antony, Villupuram.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்திலுள்ள ஒவ்வொருநாளின் தியானங்கள், வேதவாசிப்புகளை படித்து ஆறுதல் அடைகிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

Mrs.Ratna Samraj, Banglore.

6. கர்த்தருடைய கிருபையால் நானும் என் குடும்பமும் ஆசீர்வாதமாக இருக்கிறோம். செப்டம்பர் – அக்டோபர் தியானபுத்தகம் கிடைத்தது. ஜூலை – ஆகஸ்டு மாதத்தின் தியானங்கள் எனக்கு மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. ஜூலை மாதத்தின் தியானத்தில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து நிறைய காரியங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. ஆகஸ்டு மாதத்தின் தியானத்திலிருந்து யோனா மூலமாக அநேக காரியங்களைக் கற்றக்கொண்டேன். யோனாவுடைய வாழ்க்கையிலிருந்து என்னை தற்பரிசோதனை செய்ய கர்த்தர் கிருபைசெய்தார். ஒவ்வொரு நாளின் ஜெபக்குறிப்புகளுக்காகவும் நாங்கள் தவறாமல் ஜெபித்து வருகிறோம். ஊழியப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!

Pastor. A.Soman, Gobi.