வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2015)

1. இயேசுவின் இனியநாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். எனது சகோதரிக்கு Food Tube இல் பிரச்சனை இருந்தது. ஆபரேஷன் செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நாங்களும் சத்தியவசன அலுவலகத்தோடு தொடர்புகொண்டு ஜெபிக்கும்படி கேட்டிருந்தோம். நீங்களும் ஜெபித்தீர்கள். கர்த்தரின் பெரிதான கிருபையால் கடினமான சூழ்நிலையை கடந்து ஆபரேஷன் முடிந்து சுகமாக இருக்கிறார்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையில் இதை சாட்சியாக எழுதவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்கள். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!

Sis.C.Prabhavathy, Coimbatore.

2. செப்டம்பர் அக்டோபர் மாத தியானபுத்தகம் சீக்கிரமாகவே கிடைத்தது. அதிக சந்தோஷம். அதிக நன்றி. வயதான காலத்தில் அது ஒரு துணையைப் போலாகிவிட்டது. சத்தியவசன அனைத்து வகை ஊழியங்களையும் ஆண்டவர் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!

Mrs.Nirmala Martin, Bangalore.

3. சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். சத்தியவசன செய்தியாளர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் இதயத்திற்கு ஏற்ற செய்தியாக மிகவும் எளிய உரை நடைமுறையில் கேட்பதற்கு மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது. சுவி.சுசி பிரபாகர தாஸ் அவர்கள் தாவீது ராஜாவையும் சவுல் ராஜாவையும் பற்றி மிகவும் தெளிவாக சொன்ன சத்தியம் மிகவும் பிடித்தது. உங்கள் செய்திகளை கேட்பது மிகவும் அருமையாக உள்ளது.

Mr.R.Samuel, Vellore.

4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை ஒவ்வொருநாளும் அதிகாலை ஜெபத்தில் வாசித்து அளவற்ற ஆசீர்வாதத்தைப் பெற்று வருகிறோம்.

Mr.Joseph, Erode.

5. அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை ஆகிய மாத வெளியீடுகளை ஒழுங்காக பெற்றுக்கொண்டு படித்து ஆசீர்வாதமடைகிறோம். தேவன்தாமே தங்கள் ஊழியத்தை மேன்மேலும் எல்லாவித நன்மைகளினால் ஆசீர்வதித்து ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் ஆன்மீக வளர்ச்சியடைய ஜெபிக்கிறோம்.

Mr.S.C.M.Pandian, Ujjain, M.P.

6. 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எனது மூத்த மருமகனின் வேலையில் இடமாறுதலுக்காக ஜெபிக்க கடிதம் எழுதியிருந்தேன். நீங்களும் ஜெபித்தீர்கள். 2015 ஜனவரி மாதத்தில் கர்த்தர் மாறுதல் தந்தார். தயை செய்த கர்த்தருக்கு நன்றி. அனுதினமும் கிறிஸ்துவுடன் எனக்கு பயனுள்ளதாகவும் ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆங்காங்கு காணப்படும் பழுதுகளை பழுது நீக்கும் நல்ல ஒரு மெஷினாக எனக்கு உதவுகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சத்தியவசன ஊழியங்கள் மற்றும் யாவருக்காகவும் ஜெபித்து வருகிறோம்.

Mr.Samson JawaharPandian, Tirunelveli.