அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2015)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
ஆப்பிரிக்க மொழிகளில் வேதாகமம்
1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 45 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. நீகர் எனும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் 1924இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்நாட்டின் ஒரு மொழியில் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான கமரூன் நாட்டில் 1970 ஆம் ஆண்டுவரை 3 மொழிகளில் முழு வேதாகமமும், 7 மொழிகளில் புதிய ஏற்பாடும் 3 மொழிகளில் வேதப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சாட் இல் 50 வருட கால மிஷனரிப் பணிகளின் பின்பு 7 மொழிகளில் புதிய ஏற்பாடும், 5 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் உள்ளன. 1970 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் எந்த ஒரு மொழியிலும் முழுவேதாகமமும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை. மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் 1966 ஆம் ஆண்டு முழுவேதாகமமும் வெளியிடப்பட்டது.
இதைத்தவிர அந்நாட்டின் இன்னும் இரண்டு மொழிகளில் புதிய ஏற்பாடும் 3 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்ததாக 1970 ஆம் ஆண்டின் அறிக்கைகள் கூறுகின்றன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கபோன் எனும் நாட்டில் 1970ஆம் ஆண்டு வரை ஒரு மொழியில் முழுவேதாகமமும் 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 8 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கொங்கோ எனும் நாட்டில் மொத்தம் 200 மொழிகள் பேசப்படுகின்றன. 1970 ஆண்டுவரை இவற்றில் 12 மொழிகளில் முழுவேதாகமமும், 20 மொழிகளில் புதிய ஏற்பாடும், 34 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள ருவான்டா, புரூண்டி எனும் நாடுகளிலும் வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகள் நடைபெற்றுள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள எத்தி யோப்பியாவில் 4ஆம் நூற்றாண்டே கிறிஸ்தவம் பரவிய போதிலும், பின்னர் இஸ்லாமியத்தின் வளர்ச்சி காரணமாக கிறிஸ்தவம் குன்றிப்போயினும் 1866 இல் மறுபடியுமாக அந்நாட்டில் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970 ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழு வேதாகமமும், 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 10 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இந் நாட்டின் அம்ஹாரிக் மொழி வேதாகமம் 1840இலேயே வெளியிடப்பட்டது. கிழக்கு ஆப்பிரிக்காவின் இன்னுமொரு நாடான சோமாலியாவில் 1953இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1966 இல் சோமாலி மொழியில் புதிய ஏற்பாடு வெளியிடப்பட்டது. 1844 இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கென்யா நாட்டில் 1970 ஆம் ஆண்டு வரை 9 மொழிகளில் முழுவேதாகமமும், 6 மொழிகளில் புதிய ஏற்பாடும், 6 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
கிழக்கு ஆப்பிரிக்காவின் இன்னு மொரு நாடான உகன்டாவில் 1876 இல் மிஷனரிப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 4 மொழிகளில் முழுவேதாகமமும், 1 மொழியில் புதிய ஏற்பாடும், 5 மொழிகளில் வேதப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. 1860ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவின் டன்சேனியா நாட்டில் மிஷனரிப்பணி ஆரம்பிக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டுவரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழுவேதாகமமும் 15 மொழிகளில் புதிய ஏற்பாடும், 11 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.
ஆப்பிரிக்கா கண்டத்தில் தென் ஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகளவு கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். அப் பகுதியிலுள்ள அங்கோலா எனும் நாட்டில் 1878இல் மிஷனரிப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 3 மொழிகளில் முழுவேதாகமமும், 2 மொழிகளில் புதிய ஏற்பாடும், 4 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொசாம்பிக் எனும் நாட்டில் 1893 இல் மிஷனரிப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1970ஆம் ஆண்டு வரை அந்நாட் டின் 5 மொழிகளில் முழு வேதாகமமும் 3 மொழிகளில் புதிய ஏற்பாடும், 6 மொழிகளில் வேதாகமப்பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. ரொடீசியா எனும் நாட்டிற்கு 1829 இல் ரொபர்ட் மொஃபட் விஜயம் செய்திருந்த போதிலும் 1859இலேயே நிரந்தரமான மிஷனரிப்பணிகள் அந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டன. அதே சமயம் 1957ஆம் ஆண்டே அந்நாட்டின் ஒரு மொழியில் முழு வேதாகமம் வெளியிடப்பட்டது.
1970 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 4 மொழிகளில் புதிய ஏற்பாடும், ஒரு மொழியில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஸம்பியாவில் 1970 ஆம் ஆண்டுவரை 2 மொழிகளில் முழு வேதாகமமும் 5 மொழிகளில் புதிய ஏற்பாடும் 4 மொழிகளில் வேதாகமப் பகுதிகளும் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் இருக்கும் இன்னுமொரு நாடு மாலாவி ஆகும். இந்நாட்டின் தம்புக்கு எனும் ஒரு மொழியில் மட்டுமே முழுவேதாகமமும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1970ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் 5 மொழிகளில் புதிய ஏற்பாடும் ஒரு மொழியில் வேதாகமப் பகுதிகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தன.
தென்ஆப்பிரிக்கா நாட்டின் இரு மொழிகளில் முறையே 1831இலும் 1857இலும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டன. ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவு மக்களது மொழியில் 1835இல் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது.
(தொடரும்)