Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜூலை-ஆகஸ்ட் 2022)

Dr.தியோடர் எச்.எஃப்.
3. தேவனின் வாக்குத்தத்தத்தின் காலம்
எல்லாக் காலங்களைப் போலவே மூன்றாவது காலமும் நியாயத்தீர்ப்பில் முடிந்தது. அந்தக் காலத்தில் இருந்த உலகத்தின் குழப்பமான நிலைமையில், ஆபிரகாம் என்ற மனிதனை வெகு தூரத்தில் உள்ள தேசத்திற்கு செல்லும்படி தேவன் அழைத்து, நிபந்தனைகள் அற்ற வாக்குத்தத்தங்களையும் கொடுத்தார். ஆபிரகாமின் அழைப்பிலிருந்து நான்காவது காலம் ஆரம்பமாகிறது. (ஆதி. 12:1; யாத்.19:7) பூமியிலுள்ள அனைத்து ஜனங்களிலிருந்து தேவன் அவர்களை முற்றிலுமாக பிரித்து எடுத்து, அவர்கள் மத்தியில் செயல்பட்டார். உலக வரலாறு, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனங்களாகிய இஸ்ரவேலரைச் சுற்றியே செயல்பட ஆரம்பித்தது.
இந்த தேசத்தை உலகத்தின் மற்ற தேசங்கள் ஆசீர்வதிக்கப்படத் தக்கதான வாய்க்காலாக தேவன் பயன்படுத்தினார் (யோவான் 4: 22; ரோமர் 3: 1,2).
இஸ்ரவேல், ஜனங்களை நான்குக் காரணங்களுக்காக தேவன் தெரிந்தெடுத்தார்.
1. உலகில் உள்ள அனைத்து தேசங்களுக்கும், உண்மையுள்ள ஜீவிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நிரூபிப்பதற்கு (ஆதி.12:1-3).
2. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் மூலமாக பரவ செய்வதற்கு (ரோமர் 3:1-2).
3. அவருடைய அந்த ஜனங்கள் மூலமாக, மீட்பராகிய கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பி உலகத்தில் உள்ள சகல நாடுகளும் அவர்கள் மூலமாக ஆசீர்வதிக்கப்படுவதற்காக (ஆதி.12:3).
4. அவருடைய ஜனங்கள் “பூமிக்கு உப்பாக” இருந்து இந்த பூமியை அவர்கள் மூலமாக காப்பாற்றத் தக்கதாக (மத்.5:13).
வாக்குத்தத்ததின் காலம் ஆபிரகாமில் துவங்கி மோசேயோடே முடிவடைந்தது (ஆதி.12:1 – யாத். 20:1). ஆபிரகாம் மிகவும் பெரிய முக்கியமான தலைவனானார். ஆபிரகாமின் நான்குவிதமான ஒப்படைப்புபற்றி படிப்பது, நமது ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஒவ்வொரு முறையும் ஆபிரகாம் அவரை தேவனிடம் ஒப்புவிக்கும்பொழுது, தேவன் அவனுக்கு ஓர் ஆசீர்வாதத்தை அருளி, மேலும்மேலும் ஆசீர்வதித்தார்.

ஆபிரகாம்
முதலாவது ஒப்படைப்பு: ஆபிரகாம், அவன் வீட்டையும், தேசத்தையும், தன் இனத்தையும் தேவனுக்காக விட்டுவிட்டான்(ஆதி.12:1).
i. இதே கட்டளை எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது (2கொரி.6:14-18).
ii. ஆபிரகாம் முதலாவது ஆரானிற்குத்தான் சென்றான் (ஏறக்குறைய பாதி வழியில் உள்ளது) ஆரான் முழுவதுமாகத் தங்களைத் தேவனிற்கு என்று ஒப்புக்கொடுக்காத கிறிஸ்தவர்கள். ஆகவே இப்படிப்பட்டவர்களை தேவன் பயன்படுத்த இயலாது.
iii. இறுதியாக, ஆபிரகாம் (அவனது தகப்பனாரின் மரணத்திற்குப்பின்) ஆரானைவிட்டு, பாலஸ்தீனத்திற்கு வந்துசேர்ந்தான். அங்கு அவனது ஒப்புக் கொடுத்தலுக்கான, பூமிக்கேற்ற, ஆவிக்கேற்ற ஆசீர்வாதங்களுக்கான சிறப்பான வாக்குத்தத்தங்களைப் பெற்றான் (ஆதி.12:2,3; மாற்கு 10:29,30).
இரண்டாவது ஒப்படைப்பு: ஆபிரகாம், பூமிக்குரிய அவனது மகிமையையும், உயர்ந்த ஆதிக்கத்தையும் ஒப்புக்கொடுத்தான்.
1. அவர்கள் வாழ்ந்து வந்த பூமியானது, லோத்தையும், ஆபிரகாமையும் தாங்க இயலவில்லை. அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய மந்தையான கால்நடைகள் இருந்தன. அவர்கள் இருவரது மேய்ப்பர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்தது. ஆகவே அவர்கள் பிரிந்து செல்லவேண்டியது கட்டாயமானது. முதலாவது லோத்து அவனுக்கு விருப்பமான பூமியை தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டான். அவன் தேர்ந்தெடுத்ததற்கு பின் விடுபட்ட பகுதியை ஆபிரகாம் எடுத்துக்கொண்டான் (ஆதி.13:5-18).
2. இன்றைய அநேக கிறிஸ்தவர்களைப்போல, லோத்துத் தரிசித்து நடந்தான், ஆனால் ஆபிரகாமோ, விசுவாசித்து நடந்து, அவனது ஒப்படைப்பின் போது தேவனால் கொடுக்கப்பட்ட நிபந்தனையற்ற வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று நம்பினான்.
3. ஆபிரகாம், வாக்குத்தத்தத்தின்படியே கானான் தேசம் முழுவதையும் சுதந்தரித்துக்கொண்டான். லோத்தோ அவன் சம்பாதித்த அனைத்தையும் இழந்துபோனான் (ஆதி.18:19).
ஆபிரகாமின் இரண்டாவது ஒப்படைப்பின் பலனாகப் பெற்ற 3 ஆசீர்வாதங்கள்:
a) ஆபிரகாமின் மிகப்பெரிய இரண்டாவது ஒப்படைப்பின் பலனாக நிபந்தனையற்ற வாக்குத்தத்தம் அவனுக்கு அருளப்பட்டது (ஆதி.13:14,15; 17:8).
b) ஆபிரகாம் பார்க்கும் அனைத்து பூமியும், அவனுக்கும், அவனது சந்ததிக்கும் கொடுக்கப்படும் என்று தேவன் கூறினார். அவருடைய வாக்குத்தத்தத்தை நம்பும் இஸ்ரவேல் ஜனங்கள் என் றாவது ஒருநாள் திரும்பவந்து அந்த பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள் (எரேமி.25:5). மேலும் கிறிஸ்துவைக் குறித்து கூறப்பட்ட அந்த வாக்குத்தத்தத்தின்படி கிறிஸ்து இஸ்ரவேலின் இராஜாவாக திரும்ப வருவார் (கலா.3:16).
c) இறுதியாக, சுதந்தரித்தல் எதிர்காலத்தில் உள்ளது (அப்.7:5; எபி.11:8-13).
மூன்றாவது ஒப்படைப்பு: ஆபிரகாம் அவனது ஐசுவரியத்தை ஒப்புக்கொடுத்தான்.
சர்வவல்லமையுள்ள தேவன் வாக்குத்தத்தம் பண்ணின ஐசுவரியத்திற்காக, பூமியில் உள்ள ராஜாக்களின் ஐசுவரியத்தை உதறித்தள்ளி விட்டான் (ஆதி.14:21-24).
1. லோத்தை பிடித்துச் சென்றவர்களின் கையிலிருந்து அவனை மீட்டபின், ஆபிரகாம் தன் வீட்டிற்குத் திரும்பினான். ஆனால், அவன் சண்டையிட்டு, எதிர்த்துபோராடின வடதேசத்து ராஜாக்கள், அவனுக்கு எதிராக வந்தார்கள். ஆபிரகாம் இந்த உலக ராஜா கொடுத்த ஐசுவரியத்தை வேண்டாம் என்று வெறுத்து, தள்ளிவிட்டபடியினால், தேவன் அவனை மற்ற வடதேசத்து ராஜாக்களின் கையில் இருந்து அவனைக் காப்பாற்றினார் (ஆதி.15:1).
2. இயேசுகிறிஸ்துவுக்குத் தன்னை முற்றிலும் ஒப்புக் கொடுத்தவர், இந்த உலகப் பொருட்களின் மீதுள்ள ஆசையையும் விட்டுவிட மனதுள்ளவராயிருக்க வேண்டும் (மத்.6:19).
3. ஆபிரகாம் காக்கப்படுவதற்கான வாக்குத்தத்தத்தைப் பெற்றார்.
நான்காவது ஒப்படைப்பு: ஆபிரகாம் அவரது ஒரே மகனை பலியிட ஒப்புக்கொடுத்தார்.
1. தேவன் ஆபிரகாமை அழைத்து, அவனது ஒரே குமாரனை பலியிடும்படிக் கூறினார். ஒரு மகனுக்காக 25 ஆண்டுகள் ஆபிரகாம் காத்திருந்தான். அவ்வாறு காத்திருந்து பெற்ற அந்த ஒரே மகனை மறுபடியும் தேவனுக்கு பலியிடும்படி தேவன் ஆபிரகாமிடம் கூறினார். ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குத்தத்தங்களும் அவனது மகன் மூலமாகவும் பின் சந்ததியினர் மூலமாகவும் நிறைவேற வேண்டியிருந்தது. ஒரே மகனுடைய மரணம் அனைத்து வாக்குத்தத்தங்களும் நிறைவேற்றப்பட இயலாமல் தடை பண்ணப்படும்.
2. எல்லாச் சூழ்நிலைகளும் ஆபிரகாமிற்கு எதிராகச் செயல்பட்டாலும், ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் (எபி.11:17-19).
3. ஆபிரகாமிற்கு இந்த பூலோகத்திற்குரிய மேலும் பரலோகத்திற்குரிய வாக்குத்தத்தங்கள் அருளப்பட்டது (ஆதி.22:16-19). இந்த பகுதியில் கூறப்பட்டுள்ள வானத்து நட்சத்திரங்கள் ஆவிக்கேற்ற ஆசீர்வாதங்களையும், கடற்கரை மணல் பூமிக்கேற்ற ஆசீர்வாதங்களையும் குறிக்கிறதாக உள்ளது.
4. கிறிஸ்தவர்கள் அவர்களுக்குரிய அன்பானவர்களை இழக்க ஆயத்தமாக இருக்கவேண்டும் (மத்.10:37).
ஈசாக்கு
ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் ஈசாக்கிற்கும் சொந்தமானது. 11 வழிகளில் ஈசாக்கின் வாழ்க்கையானது கிறிஸ்துவின் மாதிரியாக இருந்தது.
1. வாக்குத்தத்தத்தின் குமாரன் (ஆதி.15:4;ஏசா 7:14).
2. அவனது பிறப்பு முன் அறிவிக்கப்பட்டது (ஆதி. 18:10; லூக்கா 1:31).
3. பிறப்பதற்கு முன்னமே பெயரிடப்பட்டான் (ஆதி. 17:19; லூக்கா 1:31).
4. இயற்கைக்கு மாறான பிறப்பு சாராள் மலடியாக இருந்தாள் (ஆதி.11:30) மரியாள் கன்னிகையாக இருந்தாள் (மத்.1:18-20).
5. “ஒரே குமாரன்” என்று அழைக்கப்பட்டான் (ஆதி. 22:2; எபி.11:17; யோவான் 13:16).
6. உறவுகளால் துன்புறுத்தப்பட்டு கேலி செய்யப்பட்டான் (ஆதி.21:9,10; கலா.4:28,29).
7. நியாயப்பிரமாணத்திற்கு எதிராக குற்றமற்றவன் (ஆதி.22:2; மத்.27:24-29).
8. பாரத்தைத் தனியாக சுமந்தான், ஈசாக்கு விறகுகளை தானாக சுமந்தான் (ஆதி.22:6). கிறிஸ்து நமது பாவங்களைச் சுமந்தார் (யோவான் 19:17).
9. தன்னை பலியாக, பலிபீடத்தில் அர்ப்பணிக்க மனமுவந்து சென்றான் (ஆதி.22:9; யோவான் 10:17).
10. பிதாவினால் கைவிடப்பட்டான் (ஆதி.22:12; மத்.27:46).
11. மரணமடைந்த இடத்திலிருந்து உயிரோடே எழும்பினான் (எபி.11:17-19; மத்.28:6).
எலியேசர்
எலியேசரும், பரிசுத்த ஆவியானவரும், தங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுத்தனர். 5 வழிகளில் எலியேசர் பரிசுத்தாவியானவருக்கு மாதிரியாக இருக்கிறார்.
1. ஆபிரகாம் அவனது மகனிற்கு பெண் பார்க்கும்படியாக எலியேசர் என்ற அவனது வேலைக்காரனை அனுப்பினான் (ஆதி.24). பரலோகப் பிதாவானவர் அவரது குமாரனிற்காக மணவாட்டியாகிய திருச்சபையை ஆயத்தம் பண்ண, பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்.
2. ஆபிரகாமின் குமாரன் பலியாக கொடுக்கப்பட்டபின்தான், தகப்பன் தன் குமாரனிற்கு ஒரு மணவாட்டி வேண்டும் என்று எலியேசரை அனுப்பினார் (ஆதி.22:21). நமது பரமபிதா, குமாரன் பலியாக கொடுக்கப்பட்ட பின்தான், பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்.
3. சாராளின் மரணத்திற்குப்பின் ஆபிரகாம், அவனது மகனிற்கு பெண் தேட அனுப்பினான் (ஆதி.23). பிதாவாகிய தேவனானவர், இஸ்ரவேல் மக்களால் அவரது குமாரன் தள்ளப்பட்ட பொழுது, பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார்.
4. ஆபிரகாமின் வேலைக்காரன் அவனிற்காகப் பேசாதபடி, குமாரனிற்காக பேசினான் (ஆதி. 24: 34-42). பரிசுத்த ஆவியானவரும், தம்மைக் குறித்து பேசுவதற்கு வராமல், குமாரனைக் குறித்து பேசவந்தார் (யோவான் 16:13).
5. செய்யப்பட வேண்டிய வேலை மிக அவசரமானது (ஆதி.24:53-56; லூக்கா 14:23) ஆபிரகாமின் வேலைக்காரன் ஈசாக்கின் பெண்ணிற்கு அநேக பொருட்களைப் பரிசாகக் கொடுத்தான். கிறிஸ்துவின் மணவாட்டிக்கு பரிசுத்த ஆவியானவர், அநேக பரிசுகளைக் கொடுக்கிறார் (ஆதி.24: 22, 53; 1கொரி.12).
ஆபிரகாமின் வேலைக்காரனுக்கு கொடுக்கப்பட்ட பணி முடிந்தவுடன், மற்ற வேலைகளைச் செய்ய விடுதலை பெற்றான் (ஆதி.24:61,67). கர்த்தருக்கு முன்பாக மணவாட்டியாக சபையை பரிசுத்த ஆவியானவர் கொண்டு வந்தபின், ஆவியானவர் செய்யவேண்டிய தேவனுக்கடுத்த மற்றக் காரியங்களில் ஈடுபட சுதந்திரமாக செயல் பட விடுதலை பெற்றார்.
ரெபேக்காள்
ரெபெக்காள் 4 வழிகளில் சபைக்கு மாதிரியாக இருக்கிறாள்.
1. ரெபெக்காள் மணவாளனைப் பார்க்காவிட்டாலும், ஆபிரகாமின் வேலைக்காரன் கேட்டுக் கொண்டதற்கு செவி கொடுத்தாள் (ஆதி.24). திருச்சபை கண்களால் மணவாளனைக் காணாவிட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் வேண்டுதலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறது.
2. ரெபெக்காள் அவனது நேசருக்காக அனைத்தையும் விட்டுவிட ஆயத்தமாக இருந்தாள். திருச்சபையும் கிறிஸ்துவிற்காக எல்லாவற்றையும் விட்டுவிட ஆயத்தமாக உள்ளது.
3. தனது மணவாளனைப்பற்றிய சகலமும் எலியேசரால் ரெபேக்காளுக்கு சொல்லப்பட்டது. நமது பரலோக மணவாளனான கிறிஸ்துவைப் பற்றிய இரகசியங்கள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டன.
4. ரெபெக்காள் ஆபிரகாமின் தெரிந்துகொண்ட சந்ததியல்ல, முழுவதும் உலகத்திற்குரியவளுமல்ல; அவை இரண்டிற்கும் உரியவள். கிறிஸ்துவின் மணவாட்டியும் யூதருமல்ல, புறஜாதியுமல்ல, அவள் ஒரு புதிய சிருஷ்டி! அதாவது, தடுப்பாக இருந்த நடுச்சுவர் தகர்க்கப்பட்டது (எபேசி. 2:14).
5. எகிப்தின் உபத்திரவம் துவங்கப்படுவதற்கு முன்பே மணவாட்டி ஈசாக்கால் ஏற்றுக்கொள்ளப்பட்டாள். பூமியிலே உபத்திரவக்காலம் துவங்கு முன்பாக, இயேசுகிறிஸ்துவின் மணவாட்டி மகிமையிலே ஏற்றுக்கொள்ளப்படுவாள் (வெளி.3: 10).
6. ஈசாக்கு அவனது மணவாட்டியை சந்திக்கச் சென்றான். கிறிஸ்து அவரது மணவாட்டியான சபையைச் சந்திக்க வருவார் (1தெச.4:13-18).
7. ஆபிரகாமின் மகன் அவனது மணவாட்டியை ஏற்றுக்கொண்டபின், ஆபிரகாம் கேத்தூராளை மணந்துகொண்டான் (ஆதி.25:1). கேத்தூராள் இஸ்ரவேலிற்கு அடையாளமாக உள்ளாள், மணவாட்டியாக சபை இயேசுகிறிஸ்துவோடு இருப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டபின் இஸ்ரவேலரும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள்.
மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan