ஜூலை-ஆகஸ்ட் 2022
1

கர்த்தருக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, ஐயா நான் இந்த மாத பத்திரிக்கையில் தேவனுடைய ராஜ்யம் என்றால் என்ன? என்கிற தலைப்பில் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் எழுதிய செய்தியை திரும்ப, திரும்ப படித்தேன். எனக்கு இதுவரை தேவனுடைய ராஜ்யம், பரலோக ராஜ்யம் என்பதும் ஒன்று என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நீங்கள் விளக்கியபடி (லூக்.17:20,21) தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது அது உங்களுக்குள் இருக்கிறது என்று இயேசுவானவர் கூறி இருக்கிறார்களே என நீங்களும் விளக்கியது இது எனக்கு புரிகிறது. இவ்விதமாக வேத ஆராய்ச்சிகளினாலே கற்றுக்கொள்வது ஆண்டவரை அறிகிற அறிவில் விருத்தி அடையச்செய்கிறது.

Mrs.Sundari Selwyn, V.K.Puram.

2

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு நான் சில வாரங்களாக உங்களது சத்தியவசனம் செய்தியைக் கேட்டுவருகிறேன். மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது, நெகேமியா மூலமாக தேவ வசனங்களை கேட்கிறோம் நன்றி.

Mr.P. Thiraviam,Tr. Tirunelveli.

3

Praise the Lord, Brother Anuthinamum Christhuvudan Devotion by Sis.Shanthi Ponnu was Really Heart touching Thoughts. Especially 9.7.2022 Devotion was a Fantastic Thought. Sis.Shanthi Ponnu Pointed “ The Great Love of Lord”, I was Amazed ‘Oh, How my Lord was Loving me’ Through That Devotion. Secondly I studied What ever small sin we committed, Surely The Consequence of that sin, we will Face Great Difficulties in our Life. So we live very very carefully. I Thank God for All your message Through Literatures.

Mr.J.Asir Thomas, Palayamkottai.