ஜெபக்குறிப்பு: 2022 அக்டோபர் 1 சனி

ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன் .. உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர் மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் (சங்.86:4,5).

பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் (யோசு.1:9) இப்புதிய மாதத்தில் நமது கைகளின் பிரயாசங்கள், போக்குவரவுகளில் கர்த்தர் கூட இருந்து வழிநடத்தவும், கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து நடத்த ஜெபம் செய்வோம்.