• Bro.கே.ப.ஆபிரகாம் •
(செப்டம்பர் – அக்டோபர் 2025)

 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (1 தீமோ-1:12).

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்கள் மற்றும் வாசகர்களுக்கு,

அன்பின் வாழ்த்துக்கள். சத்தியவசனம் தலைமை பொறுப்பிலிருந்து செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அன்று பணி ஓய்வுபெறுகிறேன். இவ்வூழியப்பணியில் 1988ஆம் ஆண்டு மே மாதம் இணைந்தேன். தேவனுடைய பெரிதான கிருபையால் 37 ஆண்டுகள் இவ்வூழியத்திலிருந்து தேவபணியாற்ற உதவி செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக இவ்வூழியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து பல்வேறு நிலைகளில் செயல்பட தேவன் தந்த பாக்கியத்திற்காக என் தேவனைத் துதிக்கிறேன்.

என் வாலிப வயதிலே வானொலியின் அருகிலிருந்து சத்தியவசன நிகழ்ச்சிகளைக் கேட்ட அந்நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். ஒருநாளில் நான் இந்த ஊழியத்தில் இணைந்து தலைமைதாங்கி செல்வேன் என்று நினைக்கவில்லை. தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே (ரோமர் 11:29).

சத்தியவசன ஊழியப்பணியில் அலுவலகத்தில் என்னோடு இணைந்து பணிபுரிந்த முன்னாள் மற்றும் இந்நாள் என் உடன் ஊழிய நண்பர்கள், முன்னேற்றப்பணியில் என்னோடு இணைந்து செயலாற்றிய அன்பு சகோதரர்கள், சகோதரிகள் யாவருக்கும் இந்நேரத்தில் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். சத்தியவசன செய்தியாளர்கள், எழுத் தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பங்காளர்களோடும் பழகவும் அவர்களோடு இணைந்து செயல்படவும் தேவன் தந்த நல்வாய்ப்புக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அருமை சகோதரர் ஜாண்துரை அவர்கள் இவ்வூழியத்தின் மேலாளாராக அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து பொறுப்பேற்கிறார்கள். அவர்களை மனமார வாழ்த்தி வரவேற்கிறேன். சகோதரர் அவர்கள் நல்ல ஊழிய அனுபவத்தையும் ஆவிக்குரிய பின்னணியையும் கொண்டவர்கள். அவர்கள் இவ்வூழியத்தின் தரிசனத்தை நிறைவேற்றுவார்கள் என்பதில் சந்தேகமேதும் இல்லை. இவ்வூழியம் மேன்மேலும் வளர்ந்து பெருகவும் கிறிஸ்துவின் வருகைபரியந்தம் நடைபெறவும் பங்காளர்கள் தொடர்ந்து தங்கள் ஜெபங்களில் தாங்கவும் சகோதரருக்கு உங்கள் முழுஆதரவை தந்தருளவும் வேண்டுகிறேன்.

வேதாகமத்திற்குத் திரும்புக ஊழியத்தின் மேலாண்மை இயக்குநர் Bro.Anil Kumar அவர்களுக்கும் ஆளுகை குழுவின் தலைவர்கள் Bro.B.John மற்றும் Bro. Antony Raju அவர்களுக்கும் Board Members அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

மதுரை,
Ph. 9486982004

 கே.பழனிவேல் ஆபிரகாம்
சத்தியவசனம்