வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி – பிப்ரவரி 2013)

1. நான் சத்தியவசன ஊழிய பங்காளர் என்பதைத் தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். சிறப்பாக “அனுதினமும் கிறிஸ்துவுடன்” என்ற தியானப் பகுதியை ஒழுங்காக வாசித்துத் தியானித்து கிறிஸ்துவுக்குள் வளர்ந்து வருகிறேன். மேலும் ஜுன் மாத தியானப்பகுதியை எழுதிய தர்ஷினி சேவியர் அம்மாவுக்கு நான் மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ‘நாவு’ என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தியானக் குறிப்புகள் எனக்கு சிறந்ததாக என் ஆத்மீக கண்களை திறந்துவிட்டது. எனக்கு வயது 87. ஆனால் இப்பொழுதுதான் அநேக சத்தியங்களை அறிந்து திருத்திக்கொண்டேன். நிச்சயமாக இத்தியானப் பகுதி அநேகருக்கு மிகவும் பிரயோஜனமாயிருந்திருக்கும் என்று கர்த்தருக்குள் நம்புகிறேன். கர்த்தர் தாமே உங்கள் ஊழியங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக. அனுதினமும் உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கும் ஜெப பங்காளர்.

Mr.Y.Sundaram, Tuticorin

2. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒரு அருமையான வழிகாட்டியாக ஆசீர்வாதமாக உள்ளது. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.

Mrs.Ranjini Sundersingh, Chennai

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழ் எங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. ஆவிக்குரிய வழிநடத்துதலில் அந்தப் புத்தகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. எங்களுக்கு பிரயோஜனமாக உள்ளது. தங்களது … ஊழியம் இன்னும் சிறந்து விளங்கவும், இன்னும் நிறைய மக்கள் சந்திக்கப்படவும் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிக்கிறோம்.

Mr.Babu Muthuramalingam, Coimbatore

4. Praise the Lord. July-August Anuthinamum Christhuvudan very encourage and useful for our Spiritual Path. Thank God for Sathiya vasanam. Thank for Bro.Xavier and Sis.Janet.

Mr.S.Selvaraj, Karur

5. சத்தியவசனம் ஊழியங்களுக்காக ஜெபிக்கின்றோம். ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய சத்தியவசன புத்தகத்தை மாதந்தோறும் படித்து சந்தோஷப் படுகிறேன்.

Mrs.Jimmy Lydia, Vellore

6. It gives me immeuse joining Faith Partner-Sathiyavasanam. Being Blessed by the Word of God through this Ministry. I Praise God for the Spiritual feed-both soul stirring songs and messages. I shall be much thankful. If you could kindly increase the duration of Sunday Telecast. We are also blessed with the Monday Programs. God bless abundantly Sathiyavasanam Ministry.

Mrs.V.Portia Vasanthakumari, Chennai

7. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை மூலம் அநேக சத்தியங்களை அறிந்துகொள்ள உதவுகிறது. ….. சத்தியவசனம் ஊழியத்தின் மூலம் அநேகருடைய மனக்கண்கள் திறக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம்.

Ms.Pinky Priscilla, Palayamkottai