வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர்-அக்டோபர் 2013)

1. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்திலுள்ள தினசரி வேத வாசிப்பு, தியான செய்தி, ஜெபம் இம்மூன்றும் நமது ஆவிக்குரிய வாழ்வின் பகுதிகளை தற்பரிசோதனை செய்துகொள்ளவும், தேவனது சித்தப்படி நம் வாழ்வைக் கட்டியெழுப்பவும் விசுவாசத்தில் ஆழமாக ஊன்றப்படவும் உறுதுணையாக இருக்கிறது.

 Mr.T.Edward Raja Manoharan, Chennai.

2. We received Sathiyavasanam Magazine and Anuthinamum Christhuvudan. Both are very useful for us daily reading.

Mr.E.Samuel Manoharan, Kodaikanal.

3. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எனது அனுதின ஆவிக்குரிய ஜீவியத்திற்கு ஏற்ற உணவாக இருக்கிறது. நான் சோர்வுற்று இருக்கின்ற நேரங்களில் எல்லாம் அந்த நாளுக்குரிய வசனங்கள் எனக்கு ஆறுதலாகவும் உற்சாகப்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது. எனது அனுதின ஜெபத்தில் சத்தியவசன ஊழியம் மேன்மேலும் வளர்ச்சியடையவும், ஊழியர்களுக்கு கர்த்தர் சுகம் பெலன் தரவும் ஜெபிக்கின்றேன்.

Ms.Hepzibah, Puducherry.

4. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானப்புத்தகத்தில் தேவபிள்ளைகள் அவரது பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதியிருப்பதால் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தங்களது ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs. Chandra Jackson, Ramnad.

5. I am getting your Tamil Journal “Anuthinamum Christhuvudan” once in two months in time. Thank you so much for that without reading that day’s message from that, I don’t go out. It is of very good strength to my Spiritual Life.

Mr.S.Mathews, Vellore.

6. Greetings in the name of our Lord Jesus Christ. First Let me thank God for using your team as His Blessed. Your team is a blessing for many. Your “Anuthinamum Christhuvudan” is very useful and we give the old issues to our friends and many benefitted. (Mostly Newly accepted Christ).

Mr.A.K.P.David, Chennai.

7. ஒவ்வொரு நாளும் அனுதின நூலிலுள்ள ஆலோசனைகளை காலையில் ஜெபம் செய்துவிட்டு படிப்பது வழக்கம். இரவிலும் அதனை வாசித்து குடும்ப ஜெபம் நானும் எனது மனைவியும் செய்வோம். அந்தந்த நாட்களுக்கு தியானங்கள் மனதுக்கு ரொம்ப இனிதாகவும், ஆறுதலாகவும் இருக்கும். ஜுன் 2, அன்று ‘கட்டுப்படுத்தவேண்டிய சிந்தனைகள்’ என்ற தலைப்பிலுள்ள தியானத்தில் குறிப்பிட்ட உதாரணம் என்னை உணர்வடையச் செய்தது. என்னை ரொம்பவே மனம் உடையச் செய்த இந்த தியானத்திலுள்ள வரிகள் இன்னும் என்னை ஆராய்ந்து பார்ப்பதற்கு உதவின.

Mr.P.Premraj, Erode.

8. தங்கள் சத்தியவசன பத்திரிக்கையும், அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகமும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயனுள்ளதாக உள்ளது. சகோதரி.சாந்திபொன்னுக்கு தேவன் கொடுத்த தாலந்துகளுக்காக ஆண்டவரைத் துதிக்கிறேன்.

Sis.Esther, Trichy.