வாக்குத்தத்தம்: 2023 மார்ச் 1 புதன்

நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனைத்தண்டையிலே சேரக்கடவோம் (எபிரெயர் 4:16).

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் (மீகா 2:13).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 15,16,17 | மாலை: மாற்கு 08:01-21

ஜெபக்குறிப்பு: 2023 மார்ச் 1 புதன்

உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் (மத்.6:6).

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் (மீகா 2:13) இந்தப் புதிய மாதத்திலும் நமக்கு முன்பாக உள்ள தடைகளை கர்த்தர் அகற்றி கோணலான பாதைகளைச் செவ்வையாக்கி, நாம் வேண்டிக்கொண்டதற்கும் அதிகமான நன்மைகளால் நம்மை ஆசீர்வதிக்கும்படியாக அர்ப்பணித்து ஜெபிப்போம்.

என்னை ஆராயும் கர்த்தாவே!

தியானம்: 2023 மார்ச் 1 புதன் | வேத வாசிப்பு: சங்கீதம் 139

YouTube video

வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும் (சங்கீதம் 139:24).

இந்த புதிய மாதத்தில் பிரவேசிக்க தேவன் அருளிய கிருபைகளுக்காக அவருக்கு நன்றிகளை ஏறெடுப்போம். இம்மாதத்தில் தேவன் நம்மை பாதுகாத்து நமது தேவைகள் அனைத்தையும் சந்தித்து நம் வாழ்வில் இருக்கும் தடைகள் யாவையும் நீக்கி வழிநடத்துவாராக! தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள் (மீகா 2:13).

“கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்” என்று சங்கீதத்தை ஆரம்பிப்பதிலிருந்தே, கர்த்தர் தன்னை முற்றும் முழுதாக அறிந்திருக்கிறவர் என்று தாவீது அறிக்கை செய்வதை நாம் கவனிக்க வேண்டும். கர்த்தர் சகலத்தையும் காண்கிறவர், சகலமும் அறிந்திருக்கிறவர், சகல வல்லமையுமுள்ளவர், எங்கும் நிறைந்தவர், தம்மை அறிகின்ற மேன்மையான கொடையை நமக்குக் கொடுத்திருக்கிறவர். இதையெல்லாம் அறிந்திருந்த தாவீது, தாயின் கருவில் தன்னைக் கண்டு, பிரமிக்கத்தக்க விதத்தில் உருவாக்கிய கர்த்தருக்கு, தனது சகல அசைவுகளையும் அறிந்திருக்கிற அவருக்கு மறைவாக எதுவும் இருக்கமுடியாது என்றும் ஆனந்தமாகப் பாடுகிறார். ஆனால், இறுதியில் மீண்டும் தன்னைச் சோதித்துப் பார்த்து நடத்தும்படி சங்கீதத்தை முடிப்பதேன்?

இந்த இடத்தில்தான் நாம் இன்று இருக்கிறோம். “அநேக வருடங்களாய் நான் நினைத்தது செய்தது யாவும் சரி, அவற்றுக்கான காரணங்களும் சரியானதே என்றே நினைத்து வாழ்ந்தேன். ஜெபம், வேதவாசிப்பு, ஆலய ஆராதனை, திருவிருந்து எதிலும் தவறியதில்லை. ஆனால், ஆண்டவர் என்னை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு, எனக்கு என்னை உணர்த்தியபோதுதான் என் இருதயம் எவ்வளவு அழுக்கானது என்று உணர்வடைந்து, நான் ஒரு பாவி என்று அறிக்கை செய்தேன். அந்தக்கணத்தில் கிடைத்த விடுதலையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது” என்று ஒருவர் தனது சாட்சியை உருக்கமாகக் கூறினார்.

“நான் சரி” என்று நினைப்பதுதான் மனித இயல்பு; மனிதனுடைய பழகிப்போன மனசாட்சியின் எதிரொலி. மேலும், மற்றவர்கள் நம்மை முழுதாக அறிந்துகொள்ள, நமது மனதில் உள்ளதைத் தெரிந்துகொள்ள நாம் இடமளிப்பதில்லை என்பதுவும் உண்மையே. பிறர் விரும்பாத ஏதாவது எனக்குள் இருக்குமானால் அதை அவர்கள் அறியக்கூடாது என்ற பயம் நமக்கு. வெளிவாழ்விலே நம்மை நல்லவர்கள்போலக் காட்டிக்கொண்டாலும், கர்த்தரிடம் எதுவும் மறைக்க முடியாது என்பதைத் தாவீது வாழ்வில் உணர்ந்திருந்தார். நமது தலையிலுள்ள முடியைக்கூட எண்ணிவைத்திருக்கிறவருக்கு நாம் எதைத்தான் மறைக்க முடியும்! நமது மனதைப் படைத்தவரே அவர்தானே! ஆகவேதான் தாவீது தன்னிடம் ஏதாவது பாவம் இருக்குமானால், தன் நினைவுகள் தவறானால் அவற்றை ஆராய்ந்து தனக்கு வெளிப்படுத்தும்படிக்கு ஜெபிக்கிறார். கர்த்தர் உணர்த்தாவிட்டால் தனது அவலநிலை தனக்குத் தெரியவராது என்று அறிக்கையிடுகிறார்.

ஜெபம்: பரிசுத்தமுள்ள தேவனே, என்னை ஆராய்ந்து அறியும். எனது மறைவான பாவ நிலையிலிருந்து நான் விடுதலையடைய எனக்கு உதவியருளும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

அண்ட சராசரங்களையும் படைத்து பாதுகாத்து நடத்திவருகிற இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தேவகிருபையால் புதிய மாதத்திற்குள் வந்திருக்கிறோம். காலம் சமீபமாயிருக்கிறது (வெளி.22:10). ஆண்டவராகிய இயேசு கடைசிநாட்களில் சம்பவிக்கும்படி சொல்லிச்சென்ற பூமியதிர்ச்சி, யுத்தங்கள், கொள்ளைநோய் இவைகள் யாவும் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. கடந்த நாட்களில் துருக்கி – சிரியா, நியூசிலாந்துவில் நடைபெற்ற நிலநடுக்கத்தையும், கோரவிளைவுகளையும் நாம் அறிந்திருக்கிறோம். தொடர்ந்து இந்தகாரியங்களுக்காக பாரத்தோடு மன்றாடுவோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழில் வெளிவரும் தினசரி வேதவாசிப்பு அட்டவணைப்படி ஒருவருடத்திற்குள் பரிசுத்த வேதாகமத்தை 2022ஆம் ஆண்டில் வாசித்து முடித்தவர்களின் பெயர்களை 7ஆம் பக்கத்தில் பிரசுரித்துள்ளோம். இந்த ஆண்டிலும் எல்லா பங்காளர்களும் ஒருவருடத்திற்குள் வாசித்து முடிப்பதற்கு உற்சாகப்படுத்துகிறோம். இந்த தியானங்கள் சத்தியவசன வாட்ஸ் அப், YouTube, இணையதளம், ஆகியவற்றிலும் பிரசுரமாகிவருகிறது. தங்கள் நண்பர்கள் உடன் விசுவாசிகளுக்கு தாங்கள் இதை அறிமுகப்படுத்தி அவர்களும் பயன்பெற உதவிடுங்கள்.

இந்த கல்வியாண்டிலே பங்காளர் குடும்பத்திலுள்ள அரசுத்தேர்வு, கல்வி இறுதி யாண்டு தேர்வு எழுத உள்ள எல்லாப் பிள்ளைகளுக்காகவும் ஜெபிக்கிறோம். நீண்ட நாட்களாக சந்தாவைப் புதுப்பிக்காதப் பங்காளர்கள் புதுப்பித்து ஊழியத்தைத் தாங்க அன்பாய் வேண்டுகிறோம்.

இவ்விதழில் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களிலும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் தியானங்களை எழுதியுள்ளார்கள். மார்ச் மாதத்தில் நம்மைநாமே ஆராய்ந்து பார்க்கும்வண்ணமாக லெந்து நாட்களுக்கேற்ற சிறப்புத் தியானங்களையும் ஏப்ரல் மாதத்தில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்தும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் நாம் பெற்று அனுபவிக்கிற நித்திய இரட்சிப்பின் அனுபவங்களையும் ஆழமான தியானங்களாக எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக நீங்களும் ஜெபியுங்கள். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

பலியின் இரத்தம்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2023)
Dr. உட்ரோ குரோல்

வேதபகுதி: யாத்திராகமம் 12:12-51

 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களை கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும் (யாத்தி.12:13).

பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பலிகளின் இரத்தத்தின் அவசியத்தை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. சில முற்போக்கு இறையியலாளர்கள் நற்செய்தி கிறிஸ்தவத்தை “கசாப்புக்கூடம் மதம்” என்று அழைக்கின்றனர். அநேக மக்கள் கிறிஸ்துவின் சிலுவையை நிராகரித்து, அவருடைய நன்னெறிக் கொள்கைகளை மட்டும் பின்பற்ற முயற்சிக்கின்றனர் (1கொரி.1:18). இரத்தத்தை நிராகரிப்பது இயேசுவையும் அவர் தரும் நித்திய இரட்சிப்பையும் புறக்கணித்தலுக்கு சமமாகும்.

1. தேவன் கதவு நிலைகளின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.

கதவு நிலைகளிலும் மேல் சட்டத்தி லும் பூசப்படும் இரத்தமானது “நியாயத் தீர்ப்பு வந்துகொண்டிருக்கிறது” என்று எகிப்தியருக்கு எச்சரிப்பாக அமைந்தது. ஆனால், கதவுக்கு பின்னாலிருந்த யூதர்களுக்கு அது நம்பிக்கையையும் சமாதானத்தையும் தந்தது. அவர்கள் தங்களுடைய வீட்டை சங்காரத்தூதன் கடந்து சென்றுவிடுவார்; தலைமகன் இறப்பதில்லை என்பதை அறிந்து கொண்டனர். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை பக்கத்து வீட்டின் கதவு நிலைகளில் பூசுவதால் பலனில்லை; ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டுக் கதவு நிலைகளில் பூச வேண்டும். யாத்திராகமம் 12:3-5இல் “ஒவ்வொரு ஆட்டுக்குட்டி,… ஒரு ஆட்டுக்குட்டி,… அந்த ஆட்டுக்குட்டி” என்ற சொற்கள் காணப்படுகின்றன. இந்த ஆட்டுக்குட்டி உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவை உருவகப்படுத்துகிறது (யோவான்1:29; 1பேதுரு 1:18-19).

2. தேவன் உடன்படிக்கைப் பெட்டியின் மீதிருந்த இரத்தத்தைக் கண்டார்.

யூதர்களின் நாட்காட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மகாபரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து மக்களுக்காக பாவநிவாரணம் செய்த நாள் மிக முக்கியமான நாளாகும். முதலாவது அவன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவ நிவிர்த்தி செய்ய ஒரு காளையைக் கொன்று அதன் இரத்தத்தை மகாபரிசுத்த ஸ்தலத்திலுள்ள கிருபாசனத்தின்மேல் தெளித்தான். பின்னர் ஜனங்களின் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று அதன் இரத்தத்தையும் கிருபாசனத்தின் மேல் தெளித்தான். பின்னர் உயிரோடிருக்கும் வெள்ளாட்டுக்கடாவின்மேல் தன் கைகளை வைத்து அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிட்டான் (வச.21). உடன்படிக்கைப் பெட்டிக்குள் கற்பனைப் பலகைகளும் இருந்தன. ஆண்டவர் உன்னதத்திலிருந்து கீழே நோக்கும் பொழுது அவர் மீறப்பட்ட கற்பனைகளையல்ல, கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்பட்டிருந்த இரத்தத்தையே கண்ணோக்கினார். அல்லேலூயா!

3. தேவன் மனித சரீரங்களின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார் (யாத். 29:20; லேவி.14:14,26-28).

ஆரோனும் அவனுடைய குமாரர்களும் ஆசாரியர்களாய் அபிஷேகம் பண்ணப்பட்டபொழுது, மோசே அவர்களது வலது காதின் மடலிலும், அவர்களது வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் குற்ற நிவாரண பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து பூசினான். இது தேவனுக்கு முற்றும் அர்ப்பணிப்பதற்கு அடையாளம். இதே முறைதான் சுகமான குஷ்டரோகிகள் பாளையத்திற்குத் திரும்பும்பொழுதும் பின்பற்றப்பட்டது (லேவி.1 4:14). ஒரு பாவி இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்பொழுது ஆவியானவர் அவன்மீது இரத்தத்தைத் தெளிக்கிறார்; அவன் இரட்சிக்கப்படுகிறான். ஒரு விசுவாசி தன்னுடைய பாவத்தை ஆண்டவரிடம் அறிக்கையிடும்பொழுது இரத்தம் பூசப்பட்டு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (1யோவான் 1:6-8).

4. தேவன் சிலுவையின் மேலிருந்த இரத்தத்தைக் கண்டார்.

“நமது ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று” (கொலோ.1:20). இயேசு தமது இரத்தத்தால் உண்டாக்கிய புது உடன்படிக்கையை நினைப்பூட்ட திருவிருந்தை நிறுவினார் (லூக்கா 22:20). இயேசு சிலுவையில் ஏற்பட்ட தமது காயங்களை (தழும்புகளையல்ல) பரலோகத்துக்கு எடுத்துச்சென்றார். நம்மை இரட்சிப்பதற்காக அவர் செலுத்திய கிரயத்தை அவருடைய பிள்ளைகளுக்கு அது நினைவூட்டுகிறது. குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டோம் (1 பேதுரு 1:19).

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1யோவான் 1:9) என்ற வாக்குறுதி மாறாதது.

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (மார்ச் – ஏப்ரல் 2023)

1

Dear Brother in Christ, I am a Faith Partner of Sathiyavasanam Since 1978. I am very much fascinated by each and everything from you are exclusive Glorifying our Almighty. God bless your Ministry abundantly and we are praying for the Ministry. Especially I like to hear the Songs of Sathiyavasanam. Regular Listener of the Program telecast from Nambikkai TV. God bless your Ministry.

Mrs.Hepzibah Beulah, Madurai.

2

கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரர் அவர்களுக்கு, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 2022ஆம் வருட வேதவாசிப்பு அட்டவணைபடி கர்த்தருடைய கிருபையால் முழுவேதாகமத்தையும் படித்து முடித்துவிட்டேன். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அதிக உதவியாய் இருந்தது. தங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை குடும்பமாய் பார்த்து ஆசீர்வாதமடைகிறோம். நீங்கள் அனுப்பும் எல்லா புத்தகங்களும் பயனுள்ளதாக உள்ளது.

Mrs.Beulah James, Chennai.

3

Dear sir, I am am regularly using the daily reading book Anuthinamum Christhuvudan in my morning devotion/Prayer time. I thank God for the two dear sisters Darshini Xavier & Shanthi Ponnu who write the daily devotions inspired by the Holy Sprit which help me encouraged in my spiritual walk with God. All your other Literatures help us so much to know God better and be sanctified to become worthy to stand before the son of God when He will appear in Glory.

 Rev.Dr.Jebaraj Samuel, Chennai.

4

இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் ஸ்தோத்திரங்கள். தினமும் எங்கள் குடும்ப ஜெபத்தில் “அனுதினமும் கிறிஸ்துவுடன்” இதழில் குறிப்பிட்ட வேதவாசிப்பு படித்து ஜெபிக்கிறோம். அதுமாத்திரமல்ல தினமும் வேதவாசிப்பு அட்டவணைப்படி எங்கள் வாசிப்பிலும் அதைப் பயன்படுத்துகிறோம், விசேஷமாக சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும், சத்தியவசன ஊழியங்களுக்காகவும் ஜெபித்து வருகிறோம்.

Mrs.Meneka George, Coimbatore.