மே-ஜுன் 2022
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தினால் வாழ்த்துகள். நமது சத்தியவசன தேவசெய்திகளையும் பாடல்களையும் தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிக்கை வாயிலாகவும், பார்த்தும், வாசித்தும் பயனடைந்து வருகிறேன், தேவ நாமம் மகிமைப்படுவதற்காகவும் அநேகர் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவும் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
Mrs.Janaki Rajasekaran, Mailaduthurai.
அன்புடையீர் இயேசுவின் பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், தாங்கள் தொடர்ந்து அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தனிப்பிரதி வந்துகொண்டு இருக்கிறது. மிகுந்த ஆசீர்வாதமாக உள்ளது. நன்றி. தேவனுடைய இராஜ்ஜியம் என்ற புத்தகம் முன்பு அனுப்பியிருந்ததும் ஆசீர்வாதமாக இருக்கிறது.
Mr.A.Arokiasamy, Tanjavur.
சத்தியவசன மேலாளர் அவர்களுக்கு, அருமை இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தாங்கள் அனுப்பித் தரும் அனுதினமும் கிறிஸ்துவுடன் – வேதாகம சத்தியங்களை தவறாமல் படித்து தேவனுக்குள் வளர பெரும் பாக்கியமாக இருக்கிறது . தங்களுக்கு நன்றி ஸ்தோத்திரம்.
Mr.D.Johnson, Coimbatore.
All your Posters and messages are so impressed and blessed ones… God be with you.
Mr.G.Antony.
Praise the Lord Brother, Daily devotion is very very useful to our Soul. Thank God.
Sis.Vasumathi.
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, நீங்கள் அனுப்பியிருந்த உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் (னுச.துடிாn சூநறகநடன) என்ற புத்தகம் கிடைக்கப் பெற்று வாசித்துவருகிறேன். நன்றி.
Mr. R.S.A.Sunder Singh, Tirunelveli.
அன்புள்ள சத்திய வசனம் நிர்வாகி அவர்களுக்கு. நமஸ்காரம். இப்பவும் தாங்கள் அனுப்பிய சத்தியவசனம் இருமாத இதழ் மற்றும் உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல் புத்தகம் ஒன்று கிடைக்கப்பெற்றோம். புத்தகம் அனுப்பியதற்கு நன்றி. பயனுள்ளதாக இருக்கிறது.
Mr.N.Manickam, Trichy.
அன்பான சகோதரரே, அனுதினமும் தாங்கள் அனுப்பும் இந்த செய்திகள் உண்மையாய் மனதை தொட்டு வேதாகமத்தை வாசிக்கவும், இயேசுவில் மேலும் அன்பு கொண்டு வாழவும் விருப்பம் கொள்கிறது, நன்றி.
Mrs.Kamala Bala, Srilanka.
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களுக்கு, சத்தியவசன வெளியீடுகள் அனைத்தும் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது, மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது, உங்களது ஒவ்வொரு ஊழியத் தையும் படித்து தெரிந்துகொண்டு அதற்காக நாங்கள் குடும்பமாக ஜெபிக்கிறோம். எங்களது மகனுக்காக ஜெபிக்க கடிதம் எழுதியிருந்தேன். கர்த்தர் நம்மனைவரின் ஜெபத்தைக் கேட்டு அவனுக்கு அற்புதங்களைச் செய்திருக்கிறார். கடந்த கொரோனா நாட்களில் மிகவும் வருமானம் குறைந்த காலத்திலும் கர்த்தர் எங்களை ஒருகுறைவுமில்லாமல் போஷித்தார். கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!
Mrs.Esther Nalini, Kanjikovil.