நவம்பர்-டிசம்பர் 2022
1

Dear brother in Christ, I thank God that I got October November Magazine. To read the Scriptures and write the answers give me great pleasure and again again gives new joy and finding the treasure of the Verses. Praise the Lord. May God bless your Ministry and the believers who are helping you.

Mrs.Esther Nelson, Mumbai.

2

அன்புள்ள சகோதர சகோதரி அவர்களுக்கு, உங்கள் யாவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையால் 83 வயதில் நலமாக வைத்திருக்கும் தேவனுக்கு நன்றி சொல்லுவதைவிட வேறொன்றும் இல்லை. நிறைய எழுத ஆவல் இருந்தும் முடியவில்லை, அனுதின தியான புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி, உங்கள் ஊழியம் அதிகமான ஆத்துமாக்களுக்கு பிரயோஜனமாக இருப்பதை அறிந்து தேவனைத் துதிக்கிறேன்.

Mr.Richard Sam Alex, Chennai.

3

ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், சத்தியவசனம் ஊழியங்களில் நீங்கள் வெளியிடும் புத்தகங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். அவைகள் மிகவும் பயனுள்ளவையாக எனக்கு இருந்து வருகிறது. மேலும் ஞாயிறு மதியம் நம்பிக்கை டிவியில் நிகழ்ச்சியைப் பார்த்து பயனடைகிறோம், சுவி.சுசிபிரபாகரதாஸ், பேராசிரியர்.எடிசன் ஐயாவின் செய்திகள் அருமை. இப்போதும் தாங்கள் வெளியிட்ட ‘அழகிய பெண்ணே’ என்ற புத்தகத்தை படிக்க தேவன் கிருபை செய்தார். சகோதரி சாந்தி பொன்னு அக்காவிற்காக தேவனைத் துதிக்கிறேன். மிகமிக அருமை. அதில் வேதாகம பெண்களை விளக்கியுள்ள விதம் அற்புதம்! குறிப்பாக நகோமி, ரூத், ஓர்பாள், மூவரையும் வைத்து எழுதிய தீர்மானம் என்ற கட்டுரை என்னைத் தொட்டது. இன்னும் அதிகமாய் அவர்கள் புத்தகங்கள் வெளிவர ஜெபிக்கிறேன். மேலும் சகோ. ஜீன் அவர்கள் எழுதிய எபேசியருக்கான விளக்கவுரை என் கண்களை திறந்தது. தொடர்ந்து உங்கள் இலக்கியப்பணி, ஊடக ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Eben Santhosh, Virudhunagar.

4

Dear Brother in Christ, We received your Daily Devotion. It is very much useful for our Spritual life. We pray for your Ministry.

Mrs.Rani Venkat, Vellore.

5

அன்புள்ள சத்தியவசன நிர்வாகி ஆபிரகாம் அவர்களுக்கு நமஸ்காரம், இப்பவும் தாங்கள் அனுப்பிய சத்தியவசனம் இருமாத இதழ் மற்றும் ‘உங்கள் இரட்சிப்பின் முழுமையான பலனை அனுபவித்தல்’ என்ற புத்தகம் ஒன்றும் இவ்விடம் கிடைக்கப்பெற்றோம். புத்தகம் அனுப்பியதற்கு நன்றி கூறுகிறோம்.சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம்.

Mr.Manickam, Musiri.

6

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் வாழ்த்துக்கள், நாங்கள் கர்த்தருடைய பெரிதான கிருபையால் சத்தியவசன பத்திரிக்கையை தவறாமல் வாங்கி பயன்பெற்று ஜெபித்து வருகிறோம். எங்கள் வாழ்க்கையில் கர்த்தர் செய்த எண்ணிலடங்காத கிருபைகளுக்காக அனுதினமும் கர்த்தரைத் துதிக்கிறோம்.

Mrs.Mano Kasiraj, Periyakulam.