வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச் – ஏப்ரல் 2018)

|1|
சத்தியவசனம், அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகங்களுக்காக ஒவ்வொரு மாதமும் அதிக ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பேன். எங்கள் குடும்ப ஜெபங்களில் தினந்தோறும் தியான புத்தகத்தின் வேத வசனங்களோடு படித்து வருகிறோம். இவைகள் எங்களுக்கு ஆசீர்வாதமாகவும் ஆவியை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது. இவ்விரு புத்தகங்களிலும் எழுதுபவர்களுக்காகவும் சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் விசேஷித்து ஜெபிக்கிறேன். இவ்வூழியம் இன்னும் அதிகமாக விரிவடைந்து, அதிக ஆத்துமாக்கள் ஆதாயம் பெற்றுக்கொள்ள ஜெபிக்கிறேன்.

Mrs.Meneka George, Coimbatore


|2|
அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை எல்லாம் ஒழுங்காக பெற்றுக்கொள்கிறோம். வடநாட்டிலுள்ள எங்களுக்கு இது வாழ்க்கையில் தேனிலும் இனிமையாக இருந்து வருகிறது. தேவன்தாமே தங்கள் ஊழியத்தை எல்லாவித நன்மையாலும் தாங்கி ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் ஆன்மீக வளர்ச்சியடைய ஜெபிக்கிறோம்.

Mr & Mrs.S.C.M.Pandian, Ujjain.


|3|
நம்பிக்கை டிவி வழியாக சத்தியவசன நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். Dr.புஷ்பராஜ், Prof.எடிசன். சகோ.பிரகாஷ் ஏசுவடியான் ஆகியோர் சத்தியங்களைக் கொடுத்துவருகிறார்கள். இச்செய்திகளினால் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றீர்கள். இயேசுகிறிஸ்துவுக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக.

Mr.M.Manoharan, Tirunelveli.


|4|
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். நாங்கள் வாங்கிய வீட்டிற்கு பல ஆண்டுகளாக பத்திரம் கிடைக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் கிடைக்கவில்லை. தடைகள், போராட்டங்கள் பண இழப்புகள்தான் நேரிட்டது. இறுதியாக தங்கள் பத்திரிக்கையில் சாட்சி எழுதுவேன் என பொருத்தனை பண்ணி கர்த்தருடைய பாதங்களை இறுகப்பற்றிக் கொண்டு ஜெபித்தோம். ஆண்டவர் எங்கள்மேல் மனதுருகி பத்திரம் கிடைக்க உதவி செய்தார். குடும்பமாக கர்த்தருக்கு கோடான கோடி நன்றி செலுத்துகிறோம்.

Mrs.Tamilarasi, Coimbatore.

சத்தியவசனம்