• Rev.நாட் கிராஃபோர்டு •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

Rev.நாட் கிராஃபோர்டு
வேதாகமம் என்றால் என்ன? வேதாகமத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? வேதாகமத்தை நாம் நம்ப முடியுமா? இவ்வாறாக நம்மில் எழும் கேள்விகள் பல உண்டு. இவைகள் நாம் அனைவரும் கேட்கவேண்டிய சரியான கேள்விகள்தான். வேதாகமத்தைக் குறித்து நம்மில் எழும் முக்கியமான மூன்று கேள்விகளைக் குறித்து இச்செய்தியில் பார்ப்போம். வேதாகமம் இக்கேள்விகளைக் குறித்து என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
1.வேதாகமம் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதானா?
கேலப்பின் கணக்கெடுப்பின்படி, 47 சதவீதம் அமெரிக்கர்கள் பரிசுத்த வேதாகமம் தேவனால் ஏவப்பட்ட வார்த்தை என்று நம்புகிறார்கள். 24 சதவீதம் அமெரிக்கர்கள்மட்டுமே பைபிள் தேவனின் நேரடியான வார்த்தை என்று நம்புகிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் 40 ஆண்டு காலபோக்கைப் பின்பற்றுகின்றன. வேதாகமம் தேவனால் ஏவப்பட்ட வார்த்தை என்று நாம் நம்பவேண்டுமா?
2 தீமோத்தேயு 3:16-17 கூறுகிறது: வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத் துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16-17இன் படி, வேதாகமம் அனைத்தும் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்து தல்வரை தேவனால் ஏவப்பட்டது அல்லது சுவாசிக்கப்பட்டது எனலாம். மனிதக்கரங்கள் தேவனின் எண்ணங்களைப் பிடித்து, அவர் தொடர்புகொள்ள விரும்பியதைக் கைப்பற்றியது என்பது உண்மைதான். ஆனால், இதை ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களது தனித்தன்மையோடு பல்வேறு வகைகளில் செய்தனர். இவ்வாறு சொல்வதால் நாம் அதை நம்பவேண்டுமா? சரி, அது உண்மையாக இருந்தால் நாம் நம்பதான்வேண்டும். ஆனால், இக்கூற்றை நாம் உறுதிப்படுத்துவதற்கு மற்றொரு காரணம் உள்ளது. இயேசு இந்த உண்மையை உறுதிப்படுத்தினார்.
இயேசு பழைய ஏற்பாடு முழுவதையும் அதன் மையப் பிரிவுகளையும் அதன் தனிப்பட்ட புத்தகங்களையும் அதன் நிகழ்வுகளையும் மற்றும் அதன் கடிதங்களையும் கடிதங்களின் பகுதிகளையும் தெய்வீக அதிகாரங்கொண்டவை என்று பேசினார். நீங்கள் நற்செய்தி புத்தகங்களைப் படித்தால், பழைய ஏற்பாட்டின் அதிகாரம், நம்பகத்தன்மை, இறுதி நிலை, போதுமான தன்மை, சரித்திரம், பிழையின்மை மற்றும் தவறின்மை ஆகியவற்றை இயேசு உறுதிப்படுத்தியிருப்பதைக் காணலாம்.
புதிய ஏற்பாட்டு எழுத்துக்களைப்பற்றியும் இதையே இயேசு வாக்குறுதியளித்தார். நான் உங்களுடனே இருக்கும்போதே இவற்றை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். “நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:25-26). பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டவையெல்லாம் பதிவு செய்யப்பட்டது.
எனவே இந்த தகவலை நாம் என்ன செய்ய வேண்டும்? வேதாகமம் தேவனின் நேரடியான வார்த்தையாக இருந்தால் என்ன? அதை வைத்து நாம் என்ன செய்யவேண்டும்? சரி, பவுல் 2 தீமோத்தேயு 3:17இல் இதற்கான பதிலை நமக்குத் தந்திருக்கிறார்: “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர் திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்கிறார்.
எனவே, இன்று உங்களுக்கான எனது சவால்! இதோ, நீங்கள் வேதாகமத்தைப் படிக்கும்போது, அது தேவனின் வார்த்தை என்பதை அறிந்துகொள்ளுங்கள், எனவே அவர் நமது நம்பிக்கைக்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவர். இவை வெறும் கற்பனைக் கதைகள் அல்ல. இது இன்றைய நமது வாழ்க்கைக்கான இறையியலாகவும் செயல்முறையாகவும் இருக்கிறது.
2.பரிசுத்த வேதாகமத்தில் பிழைகள் உள்ளதா?
நான் சில பிரமாண்டமான கூற்றுகளை சொல்லும்போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் என் இளைய மகன் “அப்படியா அப்பா? இல்லை, உண்மையில்தானா?” என்று சொல்வதுண்டு. எனது கருத்துகள் சில வேடிக்கையானவையாக இருக்கும் அல்லது பதிலைப்பெறுவதற்காக நான் அப்படி கூறுவேன். இது என் மகனுக்குத் தெரியும். வேதாகமம் பிழைகள் நிறைந்தது என்று பலர் ஏன் பரிந்துரைக்கிறார்கள் என்பதை இது விளக்குகிறது. “இது உண்மைக்கு மிகவும் நல்லது. சிலர் வேதாகமத்தைக் கற்பனை என்றும் கட்டுக்கதை என்றும் எழுதுகின்றனர். மற்றவர்கள் சிலர் இதை வெறுமனே ஒரு புத்தகமாக பார்க்கின்றனர். அவர்களது பார்வை தற்போது உண்மையாக தெரியலாம், ஆனால், காலப்போக்கில் அது செல்லுபடியை இழந்துவிடும்.
ஆனால் பிரியமானவர்களே, வேதாகமத்தை நாம் எவ்வாறு பார்க்கவேண்டும்? இது உண்மையா? பிழை இல்லாமல் இருக்கிறதா? அது நம்பகமானதாக இருக்குமா அல்லது காலம் வேறுவிதமாக நிரூபிக்குமா?
சரி, வேதாகமம் இதைக் குறித்து என்ன சொல்கிறது என்று பார்ப்போம்:
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர் (நீதி.30:5).
வேதாகமத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று என்று வேதாகமத்தை எழுதிய எழுத்தாளர் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது வேதாகத்தில் எழுதப்பட்டிருப்பதினால், அது உண்மை என்று நீங்கள் நம்பலாம். எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டும் விஷயங்களைக்கூட நீங்கள் அப்படியே நம்பலாம். வேதாகமத்தில் ஏறக்குறைய 2500 தீர்க்கதரிசனங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ராஜாக்கள், ராஜ்யங்கள், உலக நிகழ்வுகள், மக்கள் மற்றும் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஆகியவை உள்ளன. அந்த 2500 தீர்க்கதரிசனங்களில் 2000 ஏற்கனவே நிறைவேறிவிட்டன. மீதமுள்ள 500 தீர்க்கதரிசனங்கள் எதிர்கால நிகழ்வுகளாகும். அவை இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், நிறைவேற்றப்பட்ட 2000 தீர்க்கதரிசனங்களும் எந்தவித பிழையுமின்றி நிறைவேறியுள்ளது.
அதனால்தான் சங்கீதம் 12:6-ல் உள்ள கூற்றை நாம் அப்படியே நம்பலாம்: கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. தேவன் நமக்கு வாக்களித்திருப்பதை அவர் நிறைவேற்றுவார், தவறில்லாமல் செய்வார். கர்த்தரின் வார்த்தை ஒருபோதும் தோல்வியடைவதில்லை.
அதுமட்டுமல்ல, தேவனுடைய வார்த்தைப் பிழையற்றது. சிலர் வேதாகமத்தில் உள்ள வெளிப்படையான முரண்பாடுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். அதைக் கேட்டதும், “என்ன மாதிரி?” என்று அவர் களிடம் கேட்பேன். பெரும்பாலான நேரங்களில், பிழையென்று அவர்களால் ஒன்றையும் சுட்டிக் காட்ட முடியாது. உதாரணத்திற்கு மூன்று இரவுகள் திமிங்கலத்தின் வயிற்றில் இருந்ததாக யோனா கூறியதை ஒரு பிழையாக மக்கள் சுட்டிக் காட்டலாம். “இது வேதாகமத்தில் இருக்கலாம், ஆனால், நிச்சயமாக அது உண்மை இல்லை” என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால், யோனா கூறியதில் தவறு இல்லை என்று இயேசு உறுதியளித்தார் என்பதை நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மத்தேயு 12:40இல் இயேசு, “யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்” என்று கூறினார். இயேசுவை நேசிக்கிறவர்கள் அவரை நம்புகின்றனர். உண்மையில் நண்பர்களே, அது நடந்தது என்று இயேசு கூறும்போது, அது நடந்தது என்று நீங்களும் நம்பலாம்.
வேதாகமம் பிழையற்றது மற்றும் அது ஒரு போதும் தோல்வியடையாது! எனவே இன்று உங்களுக்கான எனது சவால் இதோ! நீங்கள் வேதாகமத்தைப் படிக்கும்போது, அது பிழையின்றி இருக்கும் என்றும், அது எப்போதும் உண்மையாக இருக்கும் என்றும் நீங்கள் நம்பலாம். ஒரு கதை உண்மையாக இருக்கும்போது அது மிகவும் அற்புதமானதா என்று நாம் கேள்வி கேட்கவேண்டியதில்லை. வேதாகமம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தமானது; ஆனால், அது இன்று பயனற்றது என்று நாம் நிராகரிக்கத் தேவையில்லை. தேவனுடைய வார்த்தை நம்பகமானது, அது காலத்தால் அழியாதது. எனவே திறந்தமனதுடனும் திறந்த இதயத்துடனும் வேதாகமத்தைப் படியுங்கள். வேதாகமத்தைப் புரிந்து கொள்ளவும் அதற்குக் கீழ்ப்படிவதற்கான ஆற்றலையும் ஆவியானவரிடம் கேளுங்கள். எனவே வேதாகமத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமென்ற நோக்கத்தோடு வேதாகமத்தை வாசிப்போம்.
3. வேதாகமத்தை நாம் நம்பலாமா?
நீங்கள் வேதாகமத்தை நம்புகிறீர்களா? ஆம், என்றால் அதை ஏன் நம்புகிறீர்கள்? அநேக கிறிஸ்தவர்களைப்போல் நீங்களும் இருப்பதினாலும் அது நம்பகமானது என்று கருதப்படுவதினாலும் வேதாகத்தை நம்புகிறீர்கள். யோவான் 17: 17இல் இயேசு கூறினார், உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். எனவே வேதாகமத்தின் உண் மைத்தன்மையை இயேசு உறுதிப்படுத்துகிறார்.
சங்கீதம் 119:160 கூறுகிறது: “உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.” சங்கீதக்காரன் கர்த்தருடைய வார்த்தை உண்மையானது என்றும் அவை என்றென்றும் உண்மையாக இருக்கிற தென்றும் அறிவிக்கிறார்.
இப்போது, இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனைப்போலவே நாம் எந்த உண்மையான கூற்றையும் நாம் அணுக வேண்டுமென்று நினைக்கிறேன். ரீகன் கூறினார், “நம்புங்கள்; ஆனால் அதை நீங்கள் சரிபார்க்கவும்.” வேறு வார்த்தைகளில் இதை கூறுவதென்றால், “சரி, நான் உன்னை நம்புகிறேன், ஆனால் நீங்கள் அதை நிரூபிக்க வேண்டும்” என்பதாகும்.
யோவான் 17:17 மற்றும் சங்கீதம் 119:160 ஆகிய வசனங்கள் இடம்பெற்றுள்ள வேதபகுதி களில் அடங்கியுள்ள சாட்சியத்தின் காரணமாக வேதாகமம் உண்மையென்று நான் நம்புகிறேன். ஆனால், நான் பரிசுத்த வேதாகமத்தை நம்ப விரும்புகிறேன், ஏனென்றால் அது உண்மை என்று எனக்குத் தெரியும். மேலும் நல்ல செய்தி என்னவென்றால், அது உண்மைதான். வேதாக மம் கடவுளின் வார்த்தை! இதுவொரு உண்மையான புனித நூல்.
உலகின் சில தனித்துவமான நிகழ்வுகள் வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவைகளை உறுதிப்படுத்த முடியும். யாத்திராகமம் 14இல், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து பிரயாணப்பட்டதை மோசே பதிவு செய்கிறார், ஆனால், பார்வோன் உடனடியாக இஸ்ரவேல் ஜனங்களை பின்தொடர தனது படைகளை அனுப்புகிறான். சரி, மோசே தனது கைகளை நீட்டி, செங்கடலை இரண்டாக பிரித்து ஜனங்களுக்கு வழிசெய்கிறார். ஜனங்கள் பத்திரமாக கடந்துசென்றதும், எகிப்தியர்கள் பிரிந்த தண்ணீரில் ஓடிக்கொண்டிருந்தனர். ஆனால், தேவன் எகிப்தியர்கள் மற்றும் அவர்களது குதிரைகளைத் தண்ணீரில் மூழ்கச்செய்தார். இதை உறுதிபடுத்தும் சான்றுகள் இன்றும் நம்மிடம் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
2000ஆம் ஆண்டில், டாக்டர் லெனார்ட் முல்லர் என்ற ஆராய்ச்சியாளர் செங்கடலில் மூழ்கும்போது, இரதங்களின் சக்கரங்கள், அச்சுகள் மற்றும் இரதங்களின் சிதைந்த பாகங்களைக் கண்டுபிடித்தார். 2015ஆம் ஆண்டில், மற்றொரு குழு நூற்றுக்கணக்கான கலைப் பொருட்கள், மனித மற்றும் குதிரை எச்சங்கள், கவசம் மற்றும் கவச இரதங்களையும் கண்டுபிடித்தது. வேதாகமம் நம்பகமானது, ஏனென்றால் அது நடந்தவை, அவை உண்மைதான்.
புதிய ஏற்பாட்டில், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரரான அப்போஸ்தலன் யாக்கோபைப் பற்றி வேதாகமம் பேசுகிறது. சரி, அப்படிப்பட்ட நபர் இருந்தது உண்மையா? அவர் உண்மையில் இயேசுவின் சகோதரன்தானா? அவருடைய அப்பா உண்மையில் யோசேப்புதானா? சரி, 2002ஆம் ஆண்டில், சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட பெட்டியொன்றை 2000 ஆண்டுகள் பழமையான ஒரு புதைகுழியில் கண்டுபிடித்தனர். இந்தப் பெட்டியின் தனிச்சிறப்பு என்னவென்றால் அதில் உள்ள கல்வெட்டுதான்! “யாக்கோபு, யோசேப்பின் மகன், இயேசுவின் சகோதரன்” (James, son of Joseph, brother of Jesus) என்று அந்த கல்வெட்டுக் கூறுகிறது. “Time” நாளிதழ் “புதிய ஏற்பாட்டு தொல்லியல் வரலாற்றில் இது வொரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு” என்று கூறியது. இன்னும் இவ்வாறு நூற்றுக்கணக்கான சான்றுகளை நாம் பார்க்கமுடியும். வேதாகமத்தில் காணப்படும் 2000 நிறைவேற்றப்பட்ட தீர்க்க தரிசனங்களில் ஏதேனும் ஒன்றை நாம் எடுத்து சோதித்துப் பார்க்கலாம்.
எனவே இது இன்று உங்களுக்கு எனது சவாலாக இருக்கட்டும். சத்தியத்திற்கானத் தேடலைத் தொடருங்கள். கர்த்தரின் வார்த்தை உண்மையானது. இவை கடவுளின் வார்த்தையென்பதால் இது உண்மைதான். உண்மையில் உண்மையென்பதால் விசுவாசத்துடன் பரிசுத்த வேதாகமத்தைப் படியுங்கள், பிறகு ஆதாரத்தைத் தேடுங்கள். வரலாறு, தொல்லியல், உள்ளான சாட்சி மற்றும் வெளிப்புற உறுதிப்படுத்தல் ஆகியவை வேதாகமத்தின் நம்பகத்தன்மையைத் தொடர்ந்து நிரூபிக்கின்றன.