• Dr.தியோடர் எச்.எஃப். •
(ஜூலை – ஆகஸ்டு 2024)

8. ராஜ்யத்தின் காலம்

Dr.தியோடர் எச்.எஃப்.

இது ஆயிரம் வருட காலத்தினை குறிக்கிறது. இதனைத் தொடர்ந்து புறஜாதிகள் அல்லது தேசங்களின் மீதான நியாயத்தீர்ப்பு இருக்கும். பாவத்தின் நிமித்தமாக முந்தைய அனைத்து காலங்களும் (யுகங்கள்) குறைத்து சுருக்கப்படும். பாவம் இன்னமும் இருப்பதாலும் அது நியாயந் தீர்க்கப்பட உள்ளதாலும், ஏழாவதும் இதனைத் தொடர்கிறது.

பூமியில் நாம் காணக்கூடிய ராஜ்யம் (அல்லது) ஆட்சி என்பது தேவனுடைய திட்டத்தில் உள்ளதாகும். இது பற்றிய முதலாவது குறிப்பு ஆதியாகமம் 1:26ல் சொல்லப்பட்டுள்ளது. தேவனுடைய திட்டத்தின் வளர்ச்சியினை நமது குறைந்த அறிவினால் அறிந்துகொள்ள இயலாவிட்டாலும், தேவன் நித்தியமான இராஜரீகம் உடையவர் என்றும் அவரின் திட்டப்படி, அவரின் காலத்தில் அனைத்தும் நடந்தேறும் என்றும் நாம் அறிந்து கொள்கிறோம்.

ஆபிரகாமை தேவன் அழைத்த போது, யார் மூலமாக இந்த இராஜா வருவார், ராஜ்யம் நிறுவப்படும் என்பதை தேவன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த ஜனங்கள் ராஜ்யத்தின் கால முழுமைக்கும் ஆட்சி செய்வார்கள்.

தாவீதின் சந்ததி இராஜாசனத்தில் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார் (2சாமு.7:12-17). அந்த நாளில் இஸ்ரேல் இந்த ராஜ்யத்திற்கு தகுதியற்றிருந்தது. இஸ்ரவேலர் தங்களுடைய பாவத்தினாலும் புறஜாதி மக்கள் தொடர்பினாலும் தங்களின் உரிமையினைத் தற்காலிகமாக இழந்துவிட்டனர்.

கி.மு.606இல் புறஜாதி மக்கள், பிரசித்திபெற்ற தேசங்களாவதற்கு தேவன் அனுமதித்தார். வேதத்தில் குறிப்பிட்ட “புறஜாதிகளின் காலம்” என்பது அப்போது தொடங்கியது (லூக்.21: 24). கர்த்தராகிய இயேசுகிறிஸ்து திடீரெனத் தோன்றி தமது ராஜ்யத்தை நிறுவும்போது இது முடிவுக்கு வரும்.

ராஜ்யம் சமீபித்திருக்கிறது!

தேவனுடைய ராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று முதலாவதாக யோவான் ஸ்நானன் பிரசங்கித்தான். பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறதென்று யோவான் ஸ்நானன் மாத்திரம் பிரசங்கிக்கவில்லை. முதலாவது 12, பின்னர் 70பேரும் அதுபோல இயேசுவும் அதனைப் பிரசங்கித்தார். இவை அனைத்தும் தேவனுடைய முன்னறிதிலும் திட்டமும் படியே நடைபெற்றன. இயேசு கிறிஸ்துவின் முதல் தோற்றத்தின்போது ராஜ்யம் அமைவதற்கான இறுதி காரியங்கள் ஏதும் சரியாக இல்லை. ராஜ்யத்தின் பிரதான பாத்திரங்களான யூதர்கள் சுத்திகரிப்பின் ஊடாக செல்லவேண்டும். புறஜாதி மக்களின் வல்லமை ஒரு துக்ககரமான முடிவுக்கு வரவேண்டும் (பார்க்க. லூக்கா 21;24).

“தேவனுடைய ராஜ்யம்” மற்றும் “பரலோக ராஜ்யம்” என்ற பதங்கள் நற்செய்தி நூல்களில் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளன. “தேவனுடைய ராஜ்யம்” மற்றும் “பரலோக ராஜ்யம்” என்ற பதங்கள் ஒன்றுக்கொன்று மாறி பயன்படுத்தப் பட்டிருப்பினும் அவை இரண்டும் முற்றிலும் ஒரே பொருள் கூறுபவையல்ல. யூதர்களுக்கு என்று பிரதானமாக எழுதப்பட்ட மத்தேயு நற்செய்தி நூலில் “பரலோக ராஜ்யம்” என்று பயன்படுத் தப்படும்போது ஏனைய பிற நற்செய்தி நூல்களில் இது தேவனுடைய ராஜ்யம் என ஆக்கியோன் குறிப்பிட்டுள்ளார் (ஒப்பிடுக: மத்.3:2, மாற்கு 1:15). இந்த இரண்டு பதங்களும் ஆவிக்குரிய ராஜ்யத்தினை மற்றும் ஆயிரவருட ராஜ்யத்தினைக் காட்டுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதி ராஜ்யத்தின் எந்த பார்வை யினை பற்றியது என தீர்மானிக்கவேண்டும். ஆவிக்குரிய ராஜ்யமானது அனைத்துக் காலத்து விசுவாசிகளை உள்ளடக்கியது (யோவான்3:3-5; 1 கொரி.6:9,10) மத்தேயு 13ல் சொல்லப்பட்டுள்ள உவமைகள் ஆவிக்குரிய ராஜ்யத்திற்குரியதாகும். இது விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் உள்ளடக்கியது என்பது தெளிவு. (கோதுமை மற்றும் களைகள்) ஆயிரம் வருட ராஜ்யம் என்பது கிறிஸ்துவின் 1000வருட பூமியின் மீதான ஆட்சியாகும். அதனை அவர் உபத்திரவ காலத்திற்குப் பிறகு பூமிக்கு திரும்ப வரும்போது நிறுவுவார் (தானி.7:27; வெளி.20:1-6).

ராஜ்யம் வெளிக்காட்டப்படுதல்

பரலோக ராஜ்யம் (அல்லது பரலோகத்திலிருந்து) ஆயிரம் வருடம் நீடிக்கும் (வெளி.20).

உலகின் நான்கு பெரிய ராஜ்யங்கள் நசுக்கப்படும்!

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தோற்றத்தின்போது அவருடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, தேசங்களின் இறுதி கூட்டமைப்பு நசுக்கப்படும் (தானி.2, வெளி.19). பாடம் 7ல் விவாதிக்கப்பட்ட உபத்திரவ காலம், ராஜ்யம் நிறுவப்படுவதற்கு முந்தி நிகழும். இந்த காலத்தில் தேவன் இஸ்ரவேலரை சுத்திகரித்து அவர்களை அவருடைய ஜனமாக பரிசுத்தபடுத்தி நிலைப்படுத்துவார் (சகரியா 13,14). இக்காலத்தில் பூமியின் அனைத்து தேசங்களும் (புறஜாதிகள்) நியாயந்தீர்க்கப்படுவர் (மத்.25:31-46).

உபத்திரகாலத்தின் இறுதியில் கிறிஸ்து பூமிக்கு திரும்பும்போது அவர்(புறஜாதிகளை) தேசங்களை நியாயந்தீர்ப்பார். விசுவாசிகளாயிருக்க ஜனங்கள் ஆயிரவருட அரசாட்சியில் பங்குபெறுவர். ஆனால், அவிசுவாசிகளாக இருப்பவர்கள் நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் (மத்.25:46; 2 தெச.1:7-10).

அதின் அரசு பரலோகத்தால் கட்டளையிடப்படும்.

1. இந்த ராஜ்யத்தின் அரசாங்கம் ஒரு இறை அரசாக இருக்கும்.

அதாவது கிறிஸ்துவே ஆளுநராக இருப்பார் அல்லது இராஜாதி இராஜாவாக இருப்பார் (லூக்கா 1:30-33). இஸ்ரவேலருக்கு தேவன் அமைத்துக் கொடுத்த முதல் அரசாங்கம் ஒரு இறையாட்சியாக இருந்தது. அவருடைய தனி பிரதிநிதியாக மோசே இருந்தார். யோசுவா இரண்டாவதாகவும் தொடர்ந்தனர். காலப்போக்கில் இஸ்ரவேலர் இந்த அமைப்பு அரசாட்சியிலிருந்து விலகி, சீரழிந்து தங்களுக்கென ஏகாதிபத்திய அரசனை ஏற்படுத்திக்கொண்டனர்.

2. இந்த ராஜ்யத்தினைக் காண்பதற்கு நீங்கள் மரிப்பதில்லை எனத் தம்முடைய சீடர்கள் சிலருக்கு கிறிஸ்து வாக்குப்பண்ணினார்.

அதின் தோற்றத்தினை அவர்களுக்குத் தந்து அவர் இதனை செய்துமுடித்தார். இந்த ராஜ்யம் எவ்வாறு செயலாற்றும் என்பதின் முன்னோட்டத்தினை மறுரூப மலை நிகழ்வினில் நாம் காணலாம் (மாற்கு 9:1-14). ஆயிரம் வருட அரசாட்சியில் அவர் எவ்வாறு இருப்பார் என்பதற்கு ஆதாரமாக கிறிஸ்துதாமே அவருடைய மகிமையான சரீரத்தில் காணப்பட்டார். எலியாவும் மோசேயும் மகிமையான சரீரத்தோடு அவர் அருகில் நின்றனர். இது ராஜ்யத்தின் காலத்தில் மனந்திரும்பிய இஸ்ரவேலர் உயிர்த்தெழுந்த சரீரங்களோடு அவர்களின் ஸ்தானத்தில் நிற்பதற்கு நிழலாட்டமாக இருக்கிறது. ராஜ்யத்தின் ஆளுகைப் பணியில் உதவுவதற்கு தங்களின் இயற்கையான சரீரங்களோடு இருக்கும் இஸ்ரவேலருக்கு மறுரூபமலையில் இயேசு வோடிருந்த மூன்று சீஷர்கள் அடையாளமாக இருக்கிறார்கள். பள்ளத்தாக்கில் உள்ள திரள்கூட்ட கலப்பு மனிதர்கள் ராஜ்யத்தின் காலத்தில் உள்ள திரள்கூட்ட கலப்பு மனிதர்களுக்கு முன் அடையாளமாக இருக்கின்றனர்.

3. அங்கே குறைந்தபட்சம் 12 சிங்காசனங்கள் இருக்கும். 12 அப்போஸ்தலர்கள் 12 கோத்திர இஸ்ரவேலரை அந்த சிங்காசனங்களிலிருந்து ஆட்சி செய்வார்கள்.

4. சபையின் முந்திய காலத்தில் மரித்துப்போன விசுவாசிகள், மகிமையின் சரீரங்களோடு ஆட்சிபுரிவர். அவர்கள் இளைப்படைவதில்லை (ஏசா. 40:31).

5. கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையானது ராஜ்யத்தின் ஆவிக்குரிய காரியத்தில் உதவி செய்வதற்காக அவரின் பக்கத்திலே இருக்கும் (வெளி. 3:21; 20:6).

அரசினுடைய இருக்கை எருசலேமில் இருக்கும்

1. பாலஸ்தீனம் இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் படி பிரிக்கப்படும்.

2. 50 சதுர மைல்கள் கொண்ட ஒரு புதிய பரிசுத்த நகரம் நிர்மாணிக்கப்பட்டு, அது உலகத்தின் தலைநகரமாகத் திகழும். இது தற்போதைய எருசலேமுக்கு அருகில் அமைந்திருக்கும்.

3.பூமியின் மேற்பரப்பு மாற்றம் பெறும். எடுத்துக் காட்டிற்கு, சவக்கடல், கடல் மட்டத்திற்கு உயர்த்தப்படும், பாலஸ்தீனத்தில் உள்ள மலைகள் சமமாக்கப்படும் (சகரியா 14:4,10,11).

தேவாலயமும் ஆராதனையும் இருக்கும்

ராஜ்யத்தின் காலத்தில் இருக்கப்போகும் அழகிய தேவாலயத்தைப்பற்றி எசேக்கியேல் 40-48ல் விவரிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அங்கே இருப்பதினால், பேழை, மன்னா, ஆரோனின் கோல், கிருபாசனம், விளக்குத்தண்டு,தூபவர்க்கபீடம், திரைச்சீலை அல்லது பஸ்கா ஆட்டுக்குட்டி என எதுவும் இருக்காது. ஆட்டுக்குட்டியும் மற்றும் பழைய ஏற்பாட்டு அனைத்து மாதிரிகளும், அவற்றின் உண்மை எதிர் மாதிரியாக கிறிஸ்துவில் தாமே காணலாம்.

ராஜ்யத்தின் சிறப்பியல்கள்

1. இக்காலத்தில் சாத்தான் கட்டப்படுவான் (வெளி.20:1-3).

2. நிலங்கள் செழிப்படைந்து மிகுந்த பலனைக் கொடுக்கும் (யோவேல் 3:18; ஆமேஸ் 9:13).

3. விலங்குகள் ராஜ்யத்தில் முழுமையான மாற்றம் ஏற்படும். அது தொடக்கத்தில், ஏதேன் தோட்டத்தில் இருந்த நிலைமைக்கு மாறும் (ஏசா.11:6-9).

4. மனித ஆயுட்காலம் மீண்டுமாக அதிகரித்து நீட்டிக்கப்படும். மனிதர்கள் 1000 ஆண்டு காலம் வாழ்வார்கள் (ஏசா. 65:20).

5. பரிசுத்த நகரின் வெளிச்சம் ஏழுமடங்கு பலமடையும். ஏனெனில் ஆட்டுக்குட்டியானவர் தாமே வெளிச்சமாக இருப்பார். அவரிடமிருந்து செங்கோல் மகிமை ஒளிவீசும் (ஏசா. 30:26).

6. ராஜ்யத்தின் காலம் என்பது பூமியில் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்மையாக இருந்தவர்களுக்கு இது வெகுமதி அளிக்கும் காலமாக இருக்கும்.

ராஜ்யத்தின் பிற்காலம்

ராஜ்யத்தின் காலத்திற்கு பிறகு, சாத்தான் சிறிது காலம் விடுவிக்கப்படுவான். அதின்பிறகு இரட்சிக்கப்படாத மரித்தோருக்கான இறுதி பெரிய நியாயத்தீர்ப்பு வெள்ளை சிங்காசனத்திலிருந்து புறப்படும் (வெளி.20:7-15). அதனைத் தொடர்ந்து பழைய வானம் பழைய பூமி அழிக்கப்படும். எல்லாத் தீமையும் பாவமும் முற்றிலும் அகற்றப்படும்.

நாமோ கண்ணீரில்லாத, வேதனையற்ற, வியாதியில்லாத அல்லது மரணம் இல்லாத ஒரு நித்திய வாழ்விற்குள் பிரவேசிப்போம்.

மொழியாக்கம்: Bro. A.Manuel