(ஜூலை – ஆகஸ்டு 2024)
1

அன்பார்ந்த தேவஊழியர்களுக்கு, நம்பிக்கை டிவியில் வேத ஆராய்ச்சி பற்றிய பாடங்களை சிறந்த நடையில் தெளிவான உச்சரிப்புகளோடு சொல்லிவரும் தேவ ஊழியர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் தியான நூல்களையும் படித்து வருகிறேன். வேதாகம கருத்துக்களை என் வாழ்க்கையில் கடைபிடித்தும் வருகின்றேன். தொடர்ந்து தங்களின் பதிப்புகளை அனுப்பித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Mrs.K.Eswari, Tiruvannamalai.

2

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதுகின்ற தியானங்கள் மனதில் பதியச் செய்கின்றது. இதயத்தைத் தொடுகிறது. குறிப்பாக மார்ச் 23, ஏப்ரல் 7,10,13 ஆகிய நாட்களின் தியானங்கள் என்னுடன் ஆணித்தரமாகப் பேசியது ஆசீர்வாதமாக இருந்தது. தியானங்களை எழுதுகிற சகோதரிகளுக்காக ஜெபித்துவருகிறேன்.

Sis.Shanthi Kirubakaran, Chennai.