(ஜனவரி – பிப்ரவரி 2025)
1

அன்பான சகோதரர் அவர்களுக்கு, ஞாயிறுதோறும் சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆவலுடன் பார்த்துவருகிறேன். பல வருடங்களாக வேதாகமப் புதிரிலும் பங்கு பெற்று விடை எழுதிவருகிறேன். வயதின்நிமித்தம் பெலவீனங்கள் உண்டு. எனக்காக ஜெபியுங்கள். சத்தியவசன ஊழியத்தில் அனுதின தியானங்கள், கட்டுரைகள் எழுதுபவர்கள் எல்லாருக்காகவும், சகோதரி சாந்திபொன்னு அவர்களுக்காகவும் ஜெபித்துவருகிறேன்.

Mrs.Menaka George, Coimbatore.

2

அன்பான சத்தியவசன ஊழியர்களுக்கு ஸ்தோத்திரம். தேவன் இம்மட்டும் எனக்கு போதுமானவராக இருக்கிறார். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் தினமும் என்னை கிறிஸ்துவுக்குள் போதித்துவருகிறது. 85 வயதிலும் தியானங்கள் என்னைத் தேற்றுகிறது. சகோதரி சாந்தி பொன்னு அவர்களுக்காகவும் மற்ற சகோதர, சகோதரிகளுக்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Mr.J.Richard Sam Alex, Chennai.