ஜெபக்குறிப்பு: ஜூலை 8 சனி

கோடைவிடுமுறை நாட்களிலே திருச்சபைகள் எங்கும் நடைபெற்ற சிறுவர் வேதாகமப்பள்ளி மற்றும் மாணவர்களுக்கான முகாம் போன்றவற்றை கர்த்தர் ஆசீர்வதித்தார். வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்.10:44) என்ற வாக்குப்படி யாவரும் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபிப்போம்.

கர்த்தருக்குப் பயப்படுதல்

தியானம்: ஜூலை 8 சனி; வேத வாசிப்பு: நீதிமொழிகள் 8:1-26

“தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம், பெருமை யையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டு வாயையும்
நான் வெறுக்கிறேன்” (நீதி.8:13).
வாலிபனாகிய யோசேப்பின் வாழ்க்கைச் சம்பவங்கள் நமக்குத் தெரியும். அவன் தேவனுக்குப் பயந்தவனாய் தீமையை வெறுத்து வாழ்ந்தான். பாவம் அவனைத் தேடி, போத்திப்பாரின் மனைவிமூலமாக வந்தபோதும், அவன் அதற்கு விலகி ஓடினான். அதனால் அவன் பொய்க்குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் தள்ளப்பட்டா லும், சிறையிலும் தேவன் யோசேப்புடன் கூடவே இருந்தார் என்று வாசிக்கிறோம்.
கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்பது, ‘தீமையை வெறுப்பதே’ என்று வாசிக்கி றோம். கர்த்தர் தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்களை உடையவராயிருக்கி றார். எனவே அவருக்குப் பயந்தவனும் அப்படியே இருக்கவேண்டும் என்று அவர் வாஞ்சிக்கிறார். ஆனால், இன்று நாம் கர்த்தருக்குப் பயந்து வாழுகிறோம் என்று சொல்லிவிட்டு. பெருமையையும், அகந்தையையும், தீயவழியையும், புரட்டு நாவை யுமே நம்மிலிருந்து மற்றையோருக்குக் காட்டுகிறோம். நமது வாழ்வில், சிந்தையில் மாற்றங்கள் இல்லை. கர்த்தருக்குப் பயந்தவர்கள் என்று காட்டும்படிக்கு ஆலயத்திற்கு ஒழுங்காகச் செல்லுகிறோம். நம்மைப் பார்க்கிறவர்கள் இவர்கள் பக்திமான்கள், கர்த்த ருக்குப் பயந்து வாழுகிறவர்கள் என்றும் சொல்லலாம். ஆனால், நமது வாழ்வின் உண்மையான வெளிப்பாடு வித்தியாசமானதாய், தேவனுக்கு உகந்ததாய் இராமற் போனால் நாம் பரிதாபத்திற்குரியவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
வேஷமான வாழ்வு அதிகம் நிலைக்காது. எந்த நிலையிலும் உண்மையுடன் வாழ ஆசிப்போமாக. உண்மையாய் வாழுகிறவர்களுக்கு தேவன் துணையாயி ருக்கிறார். அவர்களுக்கு உதவவும் அவர் பிரியமுள்ளவராயிருக்கிறார் என்பது யோசேப்பின் அனுபவத்திலிருந்து நமக்கு நன்றாகப் புரிகிறது. பொதுவாகக் குற்ற வாளிகளைத்தான் சிறையில் போடுவார்கள். இங்கே யோசேப்பு குற்றமற்றவனாய் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், தேவன் அவனோடிருந்தார். நாமும் எந்த இடத்தில் இருந்தாலும் தேவனுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதே முக்கியம். அந்த உண்மைத்துவத்தைக் காத்து நடக்கும்போது தேவனும் நமது பக்கத்தில் இருப்பதை உணரலாம்.
மனுஷரைப் பிரியப்படுத்தும் வாழ்வைவிட தேவனைப் பிரியப்படுத்தி வாழ்வதே உன்னதமானது. இதை எத்தனைபேர் உணர்ந்திருக்கிறோம்.
“இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடு களினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் துாரமாய் விலகியிருக்கிறது, அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசா.29:13).
ஜெபம்:    தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்களை உடையவரே, போலிகளை     அகற்றி, கர்த்தருக்குப் பயந்து உண்மைத்துவமாய் வாழ என்னை அர்ப்         பணிக்கின்றேன்.. ஆமென்.