Dr.தியோடர் எச்.எஃப்.
(செப்டம்பர்-அக்டோபர் 2022)

3. தேவனின் வாக்குத்தத்தத்தின் காலம்

யோசேப்பு

கீழே உள்ள விளக்கங்களில் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த 23 சம்பவங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களோடு ஒத்துள்ளது.

எண் ஆதியாகமம் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் கிறிஸ்துவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்
#1 37:3 பிதாவிற்கு பிரியமானவன் மத்.3:17,யோவான் 17:24
#2 37:4 காரணமில்லாமல் சகோதரர்களால் வெறுக்கப்பட்டான் யோவான் 15:25
#3 37:5 அவனது சகோதரர்களால் தள்ளப்பட்டான் யோவான் 7:5
#4 37:7 அவனது ஒப்பற்ற நிலைமை ஏற்றுக்கொள்ளப்படவில்லை மத்.21:37-39,கொலோ. 1:18
#5 37:8 அவனது ஆளுகை ஏற்றுக்கொள்ளப்படவில்லை லூக்கா 19:14
#6 37:11 பொறாமையினால் ஒப்புக்கொடுக்கப்பட்டான் மாற்கு 15:10
#7 37:13 அவனுடைய சகோதரர்களிடத்தில் வந்தான் யோவான் 1:11
#8 37:14 வேலைக்காரனாக அனுப்பப்பட்டான் மத்தேயு 21:33-39
#9 37:18 அவனைக் கொல்லுவதற்கு சதி செய்தார்கள் மாற்கு 14:1
#10 37:21 அவனை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது மத்தேயு 27:24
#11 37:28 யோசேப்பு இருபது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான். ஒரு அடிமைச் சிறுவனுக்குரிய விலை. இயேசு 30 வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டார். ஒரு அடிமை மனிதனின் விலை மத்தேயு 27:24
#12 39:1 அடிமையானான் பிலிப்பியர் 2:7
#13 39:2 கர்த்தர் அவனோடிருந்தார் யோவான் 8:29
#14 39:4-6 அனைத்துக் காரியங்களும் அவன் கையில் ஒப்படைக்கப்பட்டது மத்தேயு 11:27
#15 39:20 அவன் கட்டப்பட்டான் மத்தேயு 27:2
#16 40:2,3 இரண்டு குற்றவாளிகளோடு தண்டிக்கப்பட்டான் லூக்கா 23:32
#17 40:13 ஒரு குற்றவாளி மன்னிக்கப்பட்டான் லூக்கா 23:43
#18 40:14 அவனை நினைவுகூரும்படி வேண்டிக்கொண்டான் 1கொரிந்தியர் 11: 24
#19 41:14 சிறைச்சாலையிலிருந்து மீட்கப்பட்டான் அப்போஸ்தலர் 2:24
#20 41:41 அவன் உயர்த்தப்பட்டான் எபிரெயர் 1:13
#21 41:45 தள்ளப்பட்டபின் புறஜாதியிலிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் பண்ணினான் எபேசியர் 3:6
#22 42:6 அவன் எல்லா அதிகாரமும் உடையவனாயிருந்தான். ஆனால் அவனுக்கென்று சொந்த சிம்மாசனம் இல்லை யோவான் 2:5
#23 39:1 ராஜாவிடம் அவன் மூலமாய் மட்டும்தான் செல்லமுடியும் யோவான் 10:9

Dr.தியோடர் எச்.எஃப்.

மேலும் ஏழுவிதங்களில் யோசேப்பின் வாழ்க்கை கிறிஸ்துவின் வாழ்க்கையைப்போல இருந்தது.

1. யோசேப்பு புறஜாதியான ஒரு பெண்ணை திருமணம் செய்தபின் யோசேப்பின் சகோதரர்களுக்கு கஷ்டங்கள் வந்தன. மாம்சத்தின்படி கிறிஸ்துவின் சகோதரர்களான யூதர்களுக்கு, கிறிஸ்து புறஜாதியாரை ஏற்றுக்கொண்டதினால் வரும். இது உபத்திரவ காலத்தில் உண்டாகும்.

2. யோசேப்பின் சகோதரர்கள் முதலாவது யோசேப்பிடம் வந்தபொழுதே, யோசேப்பு அவர்களை அறிந்துகொண்டான், ஆனால் அவர்களோ அவனை அறியவில்லை (ஆதி.42:8). இயேசுவும் முதலாவது இவ்வுலகிற்கு வந்தபொழுது, அவருடையவர்களை அறிந்தார். ஆனால் அவர்களோ அவரை அறியவில்லை (யோவான் 1:11).

3. இரண்டாவது முறை யோசேப்பு அவனது சகோதரர்களைச் சந்தித்தபொழுது தன்னைத்தான் அவர்களுக்கு வெளிப்படுத்தினான் (ஆதி.45:1-3). கிறிஸ்துவும் அவரது இரண்டாவது வருகையில் அவரை அவரது சொந்த ஜனங்களுக்கு வெளிப்படுத்துவார் (எசேக்கி.36).

4. யோசேப்பு அவனுடைய சகோதரர்களுக்கு அவனை வெளிப்படுத்தினபின்பு, அவர்கள் யோசேப்பு உயிரோடு இருக்கிறது, மனிதகுலத்தை மீட்பதற்காக என்று அறிவித்தனர். உபத்திரவ காலத்தின் முடிவில் கிறிஸ்துவும், தம்முடையவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களுக்கு அவர் உலகில் உள்ள மனிதர்களை மீட்பதற்காக வந்துள்ளார் என்பதை மக்கள் அறிவிப்பார்கள் (மத்தேயு 24).

5. யோசேப்பு அவனுடைய சகோதரர்களுக்கு அவனை வெளிப்படுத்தினபின்பு, எகிப்து தேசத்திலே அவனது சகோதரர்களை குடியமர்த்தினான். கிறிஸ்துவும், அவருக்குச் சொந்தமானவர்களுக்கு அவரை வெளிப்படுத்தினபின், அவர்களையும் அவர் அவருடைய தேசத்திலே குடியிருக்கச் செய்வார் (எசேக்கியேல் 36).

6. யோசேப்பு முதலாவது தன்னுடைய சகோதரர்களை அவனோடு ஒப்புரவாகச் செய்தபின், அவர்களை உயர்த்தினான். கிறிஸ்துவும் தமக்குச் சொந்தமானவர்களை அவரோடு ஒப்புரவாக்கி பின் யூதர்களை உயர்த்துவார் (ரோமர் 11:25,26).

7. யோசேப்பு முதலாவது அவனது சகோதரர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டான், ஆனால் பிற்காலத்தில் அவன் அவர்களைக் காக்கும் இரட்சகனானான். கிறிஸ்துவும் அவருக்கு சொந்தமான ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். ஆனால் அவரும், பிற்காலத்தில் அவர்களைக் காத்துக்கொள்வார். 1,44,000 என்று வெளிப்படுத்தல் 7ஆம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

லோத்து

லோத்து பரலோக மகிழ்ச்சிக்கு பதிலாக பூலோக இன்பங்களைத் தேர்ந்தெடுத்தான். இது இன்றைய திருச்சபைகள் மற்றும் இன்றைய தனிப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றிய உண்மையாக உள்ளது. மாம்சத்திலுள்ள கிறிஸ்தவர்கள் எதிர்காலத்தைக் கண்ணோக்கவில்லை. அவர்கள் பரலோக மகிழ்ச்சியை சொந்தமாக்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருந்தாலும், பூமிக்குரியவைகளையே தெரிந்து கொள்கிறார்கள்.

லோத்து, தேவனுக்காக தன்னை உலகத்திலிருந்து பிரித்துக்கொள்வதற்கு பதிலாக, உலகத்தின் மாயையான நிலையற்ற உலக சந்தோஷத்தை தெரிந்துகொண்டான். உலகத்தோடும் உலக மக்களோடும் ஒத்துப்போனதால், அவனது சாட்சியை இழந்தான். இன்றைய நாட்களிலும் உலகத்தோடு ஒத்துப்போகிற கிறிஸ்தவர்கள், உலகத்தில் தங்கள் சாட்சியை இழந்துபோகிறார்கள். அவர்கள் மூலமாக கிறிஸ்து மகிமைப்படவில்லை.

லோத்து பூமிக்குரிய ஆஸ்தியை இழந்ததோடு, ஆவிக்கேற்ற மகிமையை முற்றிலும் இழந்துவிட்டான். இன்றைய கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

யாக்கோபு

சேஷ்டபுத்திர பாகத்தின் சலுகைகளை தேவன் யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். கர்த்தருடைய வாக்குத்தத்தத்திற்கு அவன் காத்திருக்காமல், தேவனுடைய தீர்மானத்திற்கு காத்திருக்காமல் அவருடைய திட்டத்திற்கு காத்திருக்காமல், முன்பாகவே பெற்றுக்கொள்ளத்தக்கதாக குறுக்கு வழியில் திட்டம் பண்ணினான். தேவன் யாக்கோபிற்கு ஆசீர்வாதத்தை வாக்குத்தத்தம் பண்ணினார். ஆனால் யாக்கோபு அந்த ஆசீர்வாதங்களை திருடிக்கொண்டான் (ஆதி.27:35,36). கிறிஸ்தவர்களும் அடிக்கடி காத்திருக்க விருப்பமில்லாமல், தேவனுக்கு முன்பாக செயல்பட்டு, ஆசீர்வாதத்தைத் திருடிக்கொள்கிறார்கள் (எபி.12:16,17).

தேவன், அவனுக்கு கிருபையை நீட்டிக் கொடுத்தபின், யாக்கோபு தேவனிடம் ஒரு வாக்குப்பண்ணினான். ஆனால் அவன், அந்த வாக்கை நிறைவேற்றவில்லை. தேவனுடைய வார்த்தையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குத்தத்தங்களுக்கும் சொந்தமான ஒரு கிறிஸ்தவன் அவன் தேவனோடு செய்த வாக்குகளை நிறைவேற்றாதவனாயிருப்பதற்கு யாக்கோபு ஒரு மாதிரியாக இருக்கிறான் (ஆதி.28:12-22).

லாபானிடமிருந்து யாக்கோபு திரும்பி வந்தபின், அவனது சகோதரனை முகமுகமாகக் கண்ட பொழுது மிகப்பெரிய சோதனைகளைச் சந்தித்தான்.

உண்மையான ஆசீர்வாதத்திற்காக அவன் தேவனோடு போராடி மேற்கொண்டான். அந்த நெருக்கடியான நேரம் கடந்துபோனபின், தேவன் அவனுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை செயல்பட அனுமதிக்காமல் அவனாகவே அவனது சொந்த வழியில் அதை நிறைவேற்ற முயற்சித்தான் (ஆதி. 32:33). இன்றும் கிறிஸ்தவர்கள் பெரிய நெருக்கடிகளைச் சந்திக்கும்பொழுது தேவனிடம் திரும்பி, தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அந்த நெருக்கடியான நேரம் கடந்து போனவுடன், அவர்கள் பொதுவாக அவர்களது சொந்த வழிக்கு அதாவது அவர்களது மாம்சமான வழிக்குத் திரும்பிப்போகிறார்கள்.

யாக்கோபு அவனது வாழ்க்கையின் இறுதியில் அவன் என்ன விதைத்தானோ, அதை அறுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டான். ஒவ்வொரு கிறிஸ்தவனும், இயற்கையின் அந்த விதிக்குத் தப்ப இயலாது. ஏனெனில் மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான் (கலா.6:7).

தேவன் அவரது ஜனங்களை எவ்வாறு காப்பாற்றினார்?

இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் இருந்தபொழுது புறஜாதிகளோடு திருமணம் செய்யக் கூடிய தீங்கை தேவன் கண்டார். அதனால் எபிரெய மக்களுடைய பரிசுத்தம் பாதிக்கப்படப்போகிறது என்று கண்டார்.

தேவன் சூழ்நிலைகள் மூலமாக இஸ்ரவேல் மக்களை எகிப்திற்கு அனுப்பினார். அங்கே அவர்கள் மேய்ப்பர்களாக பணி செய்தார்கள். எகிப்தியரின் கண்களுக்கு அது தீழ்ப்பான காரியமாயிருந்தது. இவ்விதமாக எகிப்தியர்களோடு, இஸ்ரவேலர் சம்பந்தம் கலவாதபடி தேவன் அவர்களைத் தடுத்தார். இதன்மூலம் ஆபிரகாமின் சந்ததியாராக அவர் கள் சுத்தமாக காக்கப்பட்டார்கள். நான்காவது காலம் ஏறக்குறைய 430 ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலம் முடியும்பொழுது, இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தார்கள். அவர்கள் எகிப்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டதோடு அந்தக்காலம் முடிவடைந்தது.

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan