(மார்ச் – ஏப்ரல் 2025)
கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, 2025ஆம் வருட காலண்டர் கிடைத்தது. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒவ்வொருநாளும் வேதத்தை தியானித்து ஜெபிப்பதற்கும் ஊழியத்திற்கும் உறுதுணையாக இருக்கிறது.
Mr.Nelson, Madurai.
அன்பான சகோதரருக்கு, வேதவினா போட்டி எண் 13க்கு விடை தேடிக் கண்டுபிடித்த அனுபவம் உற்சாகமாக இருந்தது. ஆறு இராஜாக்களின் தனித்தன்மையைக் கூறி அறிமுகப்படுத்தியது நன்று. சமாதானகாலத்தில் செருயாவின் குமாரன், சாலொமோனின் அபிஷேகம் பற்றிய பின்ணணி, அவன் ஆலயம் கட்டிய சம்பவம், உடன்படிக்கைப் பெட்டியின் ஸ்தானம் இவை பற்றி கடந்த காலத்தில் தவறவிட்ட உண்மைகளை அறிந்துகொள்ள போட்டி உதவியாக இருந்தது. நன்றி.
Mrs.Nirmala Oliver, Chennai.
திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு தமிழன் டிவியில் சத்தியவசன நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு வருகிறோம். அர்த்தமுள்ள பாடல்களும், அருமையான தேவசெய்திகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Mr.Yesunathan, Coimbatore.