• Dr.தியோடர் எச்.எஃப். •
(மார்ச் – ஏப்ரல் 2024)

6. சபை கிருபையின் காலம் – பகுதி 2

சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவர்

Dr.தியோடர் எச்.எஃப்.

சபையின் காலம் என்பது சிலநேரங்களில் நல்ல சரியான காரணத்திற்காக, அது பரிசுத்த ஆவியானவரின் யுகம் என்று அழைக்கப்படுகிறது. பழைய ஏற்பாட்டில் தேவத்துவத்துவத்தின் ஒருமைப்பாடு வலியுறுத்தப்படுகிறது. ஆனால் புதிய ஏற்பாட்டில் திரித்துவத்தின் ஒவ்வொரு நபரின் கிரியையும் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வேதாகமத்தின் மிக அத்தியாவசியமான நம்மை பலப்படுத்துகிற இந்த சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ளும்போது நாம் மிக பெலமுள்ள கிறிஸ்தவர்களாக மாறுவோம்.

சபையின் காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தை நாம் முழுமையாக அறிந்து புகழுவதற்கு முன்பு, அவர் ஒரு நபராக இருப்பதை அறிந்து பழகிக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராக இல்லாதிருந்தால், நாம் விரும்பியவாறு பயன்படுத்தும், நம்மைத் தூண்டுகிற ஒரு பொருளாகவே இருப்பார். ஆவியானவர் தேவத்துவத்தின் ஒரு நபராக இருக்கிறார் என்ற உண்மையினை நாம் அங்கிகரிக்கும்போது, அவரைப்பற்றிய நமது கண்ணோட்டம் முற்றிலுமாக மாற்றப்படும்.

சில கேள்விகளை நாம் நம்மிடம் கேட்டுக்கொள்வோம். பரிசுத்த ஆவியானவர் நமது அன்பிற்கும், விசுவாசத்திற்கும், துதிக்கும் பாத்திரராக இருக்கிறாரா? பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏற்று பயன்படுத்துகிறார் அல்லது நாம் அவரை ஏற்றுக்கொண்டு அவரைப் பயன்படுத்துகிறோமா? பரிசுத்த ஆவியானவரை அதிகமாக பெற்றுக்கொள்ளுமாறு நாம் தேடுகிறோமா அல்லது அவர் நம்மிடத்திலிருந்து அதிகமாக பெற அனுமதிக்கிறோமோ? பரிசுத்த ஆவியானவரை மிக அதிகமாக பெற இருப்போமானால், நாம் பெருமைப் படும் நிலை ஏற்படலாம். பரிசுத்த ஆவியானவர் நம்மை அதிகமாக ஆட்கொள்ளும் போது நாம் தாழ் மைப்படுவோம். அவரை நாம் ஒரு நபராக அறியும் போது நமது வாழ்க்கை மாற்றப் படும்.

பரிசுத்த ஆவியானவரின் ஆள்தத்துவம்

1) ஒரு நபருக்குரிய குணங்கள் அல்லது பண்புகள் பரிசுத்த ஆவியானவருக்கு இருக்கிறது.

ஒரு ஆள்தத்துவத்தின் அடையாளங்கள் அந்த உணர்ச்சி மற்றும் சித்தம் இருக்கின்றன. அநேக நேரங்களில் ஆள்தத்துவத்தை (தற்பொழுது) நமது சரீரத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்கிறோம். சரீரம் என்பது நீங்கள் ஆள்தத்துவத்துடன் வசிக்கிற ஒரு வீடாகும். மரணத்திற்கு பின்பு, மற்றும் உயிர்த்தெழும் நாள்வரை ஆளுமையாகிய நீங்கள், சரீரம் இல்லாமல் வாழ்வீர்கள். பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் ஆகியவரைப் போன்று பரிசுத்த ஆவியானவரும் ஆள்தத்துவம் உடையவர் என்பதை இனி நாம் கற்றுக்கொள்ள விருக்கும் நமது பாடங்கள் வெளிப்படுத்தும்.

அ. பரிசுத்த ஆவியானவருக்கு அறிவு உண்டு (1கொரி.2:10,11).

பரிசுத்த ஆவியானவர் நமது மனதை வெளிச்சமாக்கி, புரிந்துகொள்ளும் வல்லமையினை நமக்குத் தருகிறார். சத்தியத்தை அவர்தாமே அறிந்திருக்கிறார். அந்த சத்தியத்தை நமக்குள் மற்றும் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

ஆ. பரிசுத்த ஆவியானவருக்கு சித்தம் உண்டு (1கொரி.12:11).

பரிசுத்த ஆவியானவர் ஒரு சக்தியோ அல்லது நாம் விரும்பியவாறு பயன்படுத்தும் ஆற்றலோ அல்ல. ஆனால், அவருக்கு அவர்தாமே சொந்த சித்தமும் நம்மை பயன்படுத்தும் வாஞ்சை உள்ளவராகவும் இருக்கிறார்.

இ. பரிசுத்த ஆவியானவருக்கு ஒரு சிந்தை உண்டு (ரோமர் 8:27).

நம்முடைய சிந்தனைகளை அவர் வல்லமைப்படுத்துவது மாத்திரமல்ல, அவருக்கு ஒரு சிந்தனை உண்டு. அவர் தானாக சிந்திக்கிறார்.

ஈ) பரிசுத்த ஆவியானவருக்கு அன்புகூரும் ஆற்றல் உண்டு (15:30).

நாம் அன்புகூருவதற்கு நம்மை அவர் தூண்டுவது மாத்திரமல்ல; அவரே நம்மில் அன்புகூரு கிறார். இவ்வளவாய், தேவன் அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 கூறுகிறது. பிலிப்பியர் 2:5-8இல் இரட்சகரின் அன்பைப்பற்றிய விளக்கத்தினை நாம் காண்கிறோம். ஆனால் ஒட்டுமொத்தமாக வேதத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் அன்புகூருகிறார் எனச் சுட்டிக் காண்பிக்கிறது. நாம் பாவத்தில் இருக்கும்போது அவர் பொறுமையாய் நம்மைத் தேடிவருகிறார். அவர் நம்மீது அமர்ந்து அனலாக்கி, இறுதியில் நம்மை அவருடைய குமாரனின் சாயலாக மறுரூபமாக்குகிறார். பிதாவாகிய தேவன் உலகினை இவ்வளவாய் அன்பு கூராவிட்டால், குமாரன் இவ்வளவாய் உங்களை நேசித்து உலகிற்கு வராதிருந்தால், பரிசுத்த ஆவியானவர் உங்களை இவ்வளவாய் அன்பு கூர்ந்து தேடிவந்து உங்களை வேண்டி மாற்றம் செய்யாதிருந்தால், ஆவிக்குரிய உலகில் நீங்கள் இன்றைக்கு எங்கே இருப்பீர்கள்?

உ) பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்த முடியும் (எபேசி.4:30).

நம்முடைய ஒவ்வொரு செயலையும் நினைவுகளையும் வார்த்தைகளையும் கிரியைகளையும் பரிசுத்த ஆவியானவர் பார்க்கிறார், உணர்கிறார் மற்றும் அறிகிறார். பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆள்தத்துவம் உள்ளவர் என்பதை நாம் அங்கிகரித்தால் நம்முடைய அவருக்கான எதிர்வினை வித்தியாசமாக இருக்கும். அன்றாட வாழ்வில் இருந்து ஒரு எடுத்துக்காட்டை நாம் இதற்கு காணலாம். ஒரு குழந்தை மின்சாரத்தோடு கொண்டுள்ள தொடர்பினைக்காட்டிலும், தன் பெற்றோருக்கு கொண்டுள்ள உறவு வித்தியாசம் உண்டு. பெற்றோர் குழந்தைக்காக திட்டமிட்டு வேலை செய்கிறார். குழந்தை பெற்றோருக்கு பதிலளித்து அவர்களோடு ஒத்துழைக்கிறது. குழந்தைக்கு வெளிச்சம் தேவையெனில், அது சுவிட்சை போடுகிறது. மின் சக்தி அதின் கைவசம் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் ஒரு சக்தியோ, வல்லமையோ அல்லது செல்வாக்கோ அல்ல; அதைவிட மேலானவர்; அவர் அளவிடமுடியா ஆள்தன்மையுடையவர்.

ஒரு ஆளாக அவருக்கு சக்தியும் வல்லமையும் செல்வாக்கும் உண்டு.

2. பரிசுத்த ஆவியானவரின் ஆள்தத்துவத்துக் குரிய குணங்களை உடையவராக இருக்கிறார்.

அ). பரிசுத்த ஆவியானவர் நம்மை ஆராய்ந்து அறிகிறார் (1கொரி.2:10)

வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால் அவர் விவரிக்கும் ஒரு சத்தி அல்ல. அவர்தாமே சத்தியத்தை ஆராய்ந்தறிந்து அதை நமக்கு வெளிப் படுத்துகிறார்.

ஆ). பரிசுத்த ஆவியானவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார் (ரோமர் 8:26,27; கலா.4:6).

நம்மை ஜெபிப்பதற்கு தூண்டுகிறவர் மாத்திரமல்ல; நமக்குள் ஜெபத்திலே அவர்தாமே பெரு மூச்சோடு வேண்டுதல் செய்கிறார். உண்மையிலேயே ஒவ்வொரு விசுவாசியும் தங்களுக்காக ஜெபிக்கக்கூடிய இரண்டு நபர்களைக் கொண்டிருக்கின்றனர். நமக்காக எல்லாவற்றையும் அனுபவித்த இயேசு இருக்கிறார் (எபி.4:6) மாத்திரமல்ல; நமது உடனடி தேவைகளை அறிந்த பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். ஏனெனில் அவர் நம்முடன் வசிக்கிறார்.

இ). பரிசுத்த ஆவியானவர் சாட்சியிடுகிறார் (யோவான் 15:26,27).

சாட்சிபகர அவர் நமக்கு உதவுவது மாத்திரமல்ல, தேவனைக் குறித்தும், வார்த்தையைக் குறித்தும் பிறவற்றிக்காகவும் சாட்சியிடுகிறவராகவும் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மூலமாக, நம்மால் பிறருக்கு சாட்சி கூறவும் முடியும்.

ஈ). பரிசுத்த ஆவியானவர் ஒரு ஆசிரியரானவர் (யோவான் 14:26, 16:12-14).

பரிசுத்த ஆவியானவர் நாம் தேவனுடைய வழியினை அறிவதற்கு நமக்கு உதவுவது. மாத்திரமல்ல, நமது கரம்பிடித்து நம்மை வழி நடத்தி நாம் அறிய வேண்டிய சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறார்.

உ). பரிசுத்த ஆவியானவருக்கு கட்டளையிடுவதற் கான வல்லமையும் அதிகாரமும் உள்ளது (அப். 16:6,7).

அவர் உறுதியாய் திட்டமிட்டு, தேவன் மற்றும் கிறிஸ்துவின் பணிகளை செய்வதற்கு கட்டளையிடுகிறார்.

ஊ). பரிசுத்த ஆவியானவர் மனிதர்களை அழைத்து பணியமர்த்துகிறார் (அப்.13:2-4).

தேவனுடைய பொதுவான கட்டளைப்படி நாமனைவரும் “புறப்பட்டு போக” அழைக்கப்படுகிறோம். கர்த்தருடைய பணிக்கென பரிசுத்த ஆவியானவர் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் அழைப்பை தந்து பணியமர்த்துகிறார். இதற்கான எடுத்துக்காட்டுகளை அப்.1:24, 20:28 மற்றும் கலாத்தியர் 1:1இல் நாம் காணலாம்.

எ). கிறிஸ்துவின் சரீரத்தில் அனைத்து விசுவாசிகளைத் திருமுழுக்கு செய்கிறார் (1 கொரி.12:12,13).

நம் அனைவரையும் எழுத்தின்படியே கிறிஸ்துவின் சரீரத்தில் சேர்க்கிறார்.

ஏ). பரிசுத்த ஆவியானவர் ஊழியத்திற்கான வரங்களை அருளுகிறார் (1 கொரி.12:7-11).

அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அவர் வரங்களைப் பிரித்து வழங்குகிறார்.

ஐ). கிறிஸ்துவுக்கான அனைத்து பணிக்கும், பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தி பலப்படுத்துகிறார் (சகரி.4:6).

பரிசுத்த ஆவியானவரின் தெய்வீகத்தன்மை

1.தேவனுடைய நான்கு தெய்வீகத் தன்மைகளும் பரிசுத்த ஆவியானவருக்கு உண்டு.

அ) நித்தியமானவர் (எபி.9:14): தேவனுக்கு மாத்திரமே இந்த பண்பு உண்டு. அவர் மாத்திரமே என் றென்றும் இருப்பவர். பரிசுத்த ஆவியானவர் தேவனாக இருக்கிறார்.

ஆ) சர்வவியாபி (சங்.139:7-10): பரிசுத்த ஆவியானவர் ஒரு இடத்திலோ, ஒரு காலத்திற்குள்ளோ வரை யறுக்க முடியாது. ஆனால், அவர் எங்கும் இருக்கிறார். இது தேவனுக்குமட்டுமே உண்மையாகும்.

இ) சர்வஞானி (யோவான் 14:26): அவர் அனைத்தையும் அறிந்தவர். நித்திய நித்திய காலத்திற்கும் அவர் அறியாதது ஒன்று இல்லை. நித்திய தேவனைப்பற்றி மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.

ஈ) சர்வவல்லவர் (லூக்.1:35): அவருக்கு அனைத்து ஆற்றலும் உண்டு. பரிசுத்த ஆவியானவரால் கூடாதது ஒன்றுமில்லை. அவர் எதையும் எப்படியும் செய்யும் வல்லமை உடையவர். இந்த பண்பு தேவனுக்கு மட்டுமே உண்டு.

2) தெய்வீகத்திற்கான மூன்று தெளிவான கிரியை களை பரிசுத்த ஆவியானவர் செய்கிறார்.

அவை எந்த மனிதனிடமிருந்தோ, சிருஷ்டியி டமிருந்தோ, அல்லது வல்லமையிடமிருந்தோ புறப்பட முடியாது.

அ) சிருஷ்டிப்பு (ஆதி.1:1-3): ஆதியாகமத்தில் உள்ள சிருஷ்டிப்பின் கிரியை தேவனை அன்றி வேறெந்த காரியத்துடன் ஒருபோதும் தொடர்பில்லை, வேறு யாரும் சிருஷ்டிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் தேவனாக சிருஷ்டிப்பில் தீவிரமாக செயலாற்றினார்.

ஆ) ஜீவன் (யோவான்3:3-6): சிருஷ்டிப்பும், ஜீவன் அளிப்பதும் “நித்திய தேவனால் மாத்திரமே முடியும். இந்த செயல் பரிசுத்த ஆவியானவருக்குமுள்ள தன்மை என்பதால், அவர் நித்திய தேவன் என்பதைக் காட்டுகிறது.

இ) வேதாகமத்தின் ஆக்கியோன் (2பேதுரு 1:21) பரிசுத்த ஆவியானவரே வேதாகமத்தின் ஆக்கியோன் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் மாத்திரம் இந்த புத்தகம் எழுதியிருக்க முடியாது. இது நித்திய தேவனுடைய வார்த்தை. அதின் ஆக்கியோன் பரிசுத்த ஆவியானவராகும். எனவே பரிசுத்த ஆவியானவர் நித்தியமானவர், அவர் தேவன் என்று நாம் முடிவுக்கு வருகிறோம்.

3. “பரிசுத்த ஆவியானவர்” என்ற பெயர் “பிதாவா கிய தேவன்” மற்றும் “குமாரனாகிய இயேசு” என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. (பார்க்க. மத்.28:19; 2நாளா.13:14) தேவத்துவத்தில் உள்ள மூன்று பேர்களும் அடிக்கடி ஒன்றாக காணப்படுகிறது.

4. பரிசுத்த ஆவியானவர் தேவன் என்று நிச்சயமாகவே அழைக்கப்படுகிறார் (அப்.5:3,4).

வசனம் 3ல் அனனியா சப்பீராள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக பொய் சொன்னதாக கூறுகிறார். ஆனால் வசனம் 5ல், தேவனுக்கு எதிராக பொய் சொன்னதாக அவர் கூறுகிறார். “பரிசுத்த ஆவியானவர்” என்பது “தேவன்” என்ற அதே அர்த்தம் கொண்டதாக இருக்கிறது.

அ) தேவத்துவ தலைமையில் பரிசுத்த ஆவியானவர் ஒரு தனித்த நபராக இருக்கிறார். (லூக்கா 3:21,22; யோவா.14:16).

ஆ) பரிசுத்த ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் கீழ்ப்பட்டிருந்தார்; அவர் தேவன் ஆக இருக்கிறார். (யோவான் 14:26, 16:13,14)

அதேபோன்று கிறிஸ்துவும் அவருடைய மகிமையைத் தேடாமல், பிதாவுக்கு தம்மை கீழ்ப்படுத்துகிறார் (யோவான் 7:18). மூன்று நபர்களில் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்) ஒவ்வொருவரும் தேவனாக இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களை ஒப்புரவாக்கும் ஊழியத்தில் குமாரன், பிதாவுக்கு தன்னைக் கீழ்ப்படுத்துகிறார், பரிசுத்த ஆவியானவர் பிதாவுக்கும் குமாரனுக்கும் தன்னை கீழ்ப்படுத்துகிறார்.

(தொடரும்)

மொழியாக்கம்: Bro. A.Manuel